×

இன்று உலக பல்லுறுப்பு நோய் தினம் : உடல் ஆரோக்கியத்தை காப்போம்

ஒரு ஆஸ்பத்திரிக்கு சென்று சுற்றிலும் உங்கள் பார்வையை வீசி விட்டு பாருங்கள். பிறந்த குழந்தை முதல், வாழ்வின் இறுதிக்கட்டத்தை எட்டிய முதியவர் வரை பலர் நோய்களால் படும் அவதியை காண முடியும்.  சிலர் பிறக்கும்போதில் இருந்தே நோயுடன் பிறக்கிறார்கள் என்கிறது மருத்துவம். இதை துவக்கத்திலேயே அறிகுறிகள் மூலம் அறியலாம். காலங்கள் செல்ல செல்ல சிலருக்கு தெரிய வரும். மரபு வழியாகவும் சில நோய்கள் நம்மை தாக்குகின்றன. பெற்றோருக்கு சர்க்கரை நோய் பாதிப்பு இருந்தால், அது பிள்ளைகளுக்கு வருவதற்கான வாய்ப்புகள் 90 சதவீதம் உள்ளன. நோய்களுக்காக இந்த உலகத்தில் பஞ்சம்.

புதிது புதிதாக நோய்கள் குழந்தைகள் போல இந்த மண்ணில் பிறந்து கொண்டுதான் இருக்கின்றன. இதில் பல்லுறுப்பு நோய் மிகக்கொடுமையானது. அதை நினைவு கூறும் வகையில்தான் ஒவ்வொரு ஆண்டும் மே 10ம் தேதி ‘உலக செஞ்சரும பல்லுறுப்பு தினம்’ அனுசரிக்கப்படுகிறது.2019 நிலவரப்படி, உலகம் முழுவதும் பல்லுறுப்பு நோயால் சுமார் 60 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவக்குறிப்புகள் தெரிவிக்கின்றன. அதென்ன பல்லுறப்பு நோய்? நமது உடலில் தோல் மட்டுமில்லாமல் மூளை, சிறுநீரகம்,  நுரையிரல், இருதயம், கல்லீரம் உள்ளிட்ட உள்ளுறுப்புகள், எலும்புகளையும் தாக்கும் கொடிய நோயை பல்லுறுப்பு நோய் என்கிறோம்.

எப்படி வருகிறது: மருத்துவர்கள் ஆலோசனையின்றி தாங்களாகவே சில மருந்துகளை உட்கொள்ளுதல், புகை, மது உள்ளிட்ட போதை பழக்க வழக்கங்கள், துரித உணவு வகைகள் உள்ளிட்டவைகளால் பல்லுறுப்பு நோய் ஏற்படுகிறது.  

அறிகுறிகள்: இதற்கான அறிகுறிகள் என்னென்ன என்கிறீர்களா? தோலில் சிவப்பு நிறத்தில் தடிப்புகள் ஏற்படுதல், கடும் காய்ச்சலால் அவதியடைதல், தலைமுடி உதிர்தல், ரத்தசோகை உள்ளிட்டவைகள் தென்படுகிறதா? ஏற்படும். வாய்ப்புண், சோர்வு நிலை, ரத்த  சோகை, தோலில் புதிய சிவப்பு நிற தடிப்புகள் போன்றவை இந்நோயின்  அறிகுறிகளாகும். சிலருக்கு மரபு வழியாகவே இந்த நோய் உருவாகிறது.

பெண்களே இந்த வகை நோயால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். துவக்கத்திலேயே இதுபோன்ற அறிகுறிகள் தென்படும்போது தகுந்த மருத்துவரை அணுகி சிகிச்சை பெற்றாலே போதும். குணப்படுத்தி விடலாம் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். தடுப்பது எப்படி ?: மரபு வழி வரும் என்றாலும் கூட, சிலர் அளவுக்கதிகமாக போதை மருந்து உட்கொள்ளும்போது பிரச்னைகள் ஏற்படுகின்றன. ஒருவர் தொடர்ந்து புகை பிடிக்கும்போது, இயல்பாகவே அவரது ரத்த அழுத்தம் கூடுதலாகிறது.

அது மட்டுமின்றி கட்டுப்பாடே இல்லாமல் நினைவுகள் மறக்கும் அளவுக்கு மது அருந்தினாலும் எளிதில் பல்லுறுப்புகள் பாதிக்கப்படக்கூடிய வாய்ப்புகள் அதிகளவு உள்ளன. அதுமட்டுமல்ல... துரித மற்றும் அசைவ உணவகங்களில் சுவைக்காக சேர்க்கப்படும் சில உப்புக்களாலும் உடல் உள்ளுறுப்புகள் ஒவ்வொன்றாக பாதிக்கப்படுகின்றன. இவற்றை தடுக்க கூடுமானவரை வீட்டு உணவுகளை உட்கொள்வது சிறந்தது.

Tags : World , World Lupus day
× RELATED சில்லி பாயின்ட்…