×

டெல்லியில் வாக்குப்பதிவு நாளில் அதிகாலை 4 மணிக்கே மெட்ரோ ரயில் சேவை தொடங்கும் என அறிவிப்பு!

புதுடெல்லி : டெல்லியில் வாக்குப்பதிவு தினத்தன்று அதிகாலை 4 மணி முதல் மெட்ரோ ரெயில் சேவை தொடங்கும் என மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது. நாடு முழுவதும் 17வது மக்களவை தேர்தல் கடந்த ஏப்., 11ம் தேதி நடைபெற்று வருகிறது. இதனையடுத்து தலைநகர் டெல்லியில் வரும் மே 12ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகளின் முக்கிய தலைவர்கள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் வாக்குப்பதிவின் போது வாக்காளர்கள் மற்றும் வாக்குசாவடியில் பணிப்புரியும் அதிகாரிகள் குறிப்பிட்ட நேரத்தில் செல்வதற்காக டெல்லி மெட்ரோ நிர்வாகம் முன்கூட்டியே மெட்ரோ ரயிலை இயக்க நடவடிக்கை எடுத்துள்ளது.

டெல்லியில் எப்போதும் மெட்ரோ சேவை காலை 6 மணிக்கு தொடங்கும் நிலையில், வரும் மே 12ம் தேதி 2 மணி நேரத்திற்கு முன்னதாக அதிகாலை 4 மணி முதலே மெட்ரோ ரயில் இயங்கும் என மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது. மேலும் துவாரகா பகுதி 21 முதல் வைஷாலி செல்லும் ரயில் சேவை அதிகாலை 4.30 மணிக்கு தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து மே 12ம் தேதிக்கு பிறகு வழக்கம் போல மெட்ரோ ரயில் அட்டவணைப்படி இயங்கும் என மெட்ரோ நிர்வாகம் தகவல் அளித்துள்ளது.


Tags : Delhi Metro Rail , Delhi, polling, Lok Sabha election, metro train
× RELATED டெல்லி மெட்ரோ ரயில் நிர்வாக ஊழியர்கள் 20 பேருக்கு கொரோனா தொற்று உறுதி