×

ஐஎஸ் தீவிரவாதிகள் பயன்படுத்தும் வெடிப்பொருட்கள் கேரளாவில் பதுக்கல்

* தாக்குதல் நடத்த திட்டம்?
* உளவுத்துறைக்கு கிடைத்த ரகசிய தகவலால் அதிர்ச்சி

திருவனந்தபுரம்: ஐஎஸ்  தீவிரவாதிகள் குண்டு வெடிப்பு தாக்குதலுக்கு பயன்படுத்தும் சாத்தானின்  தாய் என்றழைக்கப்படும் டிஏடிபி வெடிபொருள் கேரளாவுக்கு கொண்டு  வரப்பட்டுள்ளதாக உளவுத் துறைக்கு ரகசிய தகவல்  கிடைத்திருப்பது பெரும்  அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.இலங்கையில் கடந்த சில தினங்களுக்கு  முன்பு நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் 230க்கும் மேற்பட்டவர்கள்  கொடூரமாக கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு ஐஎஸ் தீவிரவாத இயக்கம்  பொறுப்பேற்றது.  இலங்கை தாக்குதலுக்கு  மூளையாக செயல்பட்ட ஒருவர்  கேரளாவுக்கு மத பிரசங்கம் செய்ய வந்ததாக தகவல் வெளியானது. இதையடுத்து  பாலக்காடு, காசர்கோட்டில் தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) அதிகாரிகள்  அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர்.இந்த சோதனையின்போது  பாலக்காட்டை சேர்ந்த ரியாஸ் அபுபக்கர் என்பவரை கைது செய்தனர்.  இந்த நிலையில் கேரளாவில் இருந்து ஐஎஸ் இயக்கத்துக்கு ஆட்களை  தேர்வு செய்வதில் கொல்லத்தை சேர்ந்த முகமது பைசல் என்பவருக்கு  தொடர்பு  இருப்பது தெரியவந்தது. அவர் கத்தார் நாட்டில் உள்ள தோகாவுக்கு தப்பி  ஓடினார். தொடர்ந்து தோகா ேபாலீஸ் உதவியுடன் முகம்மது பைசலை கேரளாவுக்கு  வரவழைத்து பிடித்தனர்.என்ஐஏ அதிகாரிகள் அவரிடம்  தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விசாரணையில் பல்வேறு  திடுக்கிடும் தகவல்கள் கிடைத்ததாக கூறப்படுகிறது. ஐஎஸ் தீவிரவாத  இயக்கத்தினர் குண்டுவெடிப்பு தாக்குதலுக்கு பெரும்பாலும்  டிரை அசட்டோன்  டிரை பெராக்சைடு (டிஏடிபி) என்ற வெடிபொருளை தான் பயன்படுத்துவார்களாம். இது  மிகவும் சக்திவாய்ந்த வெடிபொருளாகும்.

இதை ‘சாத்தானின் தாய்’ என்று  அழைக்கின்றனர். இந்த வெடிபொருளை போலீசாரால் கண்டுபிடிப்பது மிகவும் சிரமம்  ஆகும். சமீபத்தில் இலங்கையில் நடந்த குண்டு வெடிப்புக்கும் இந்த வெடிபொருள்  தான் பயன்படுத்தப்பட்டதாம். இந்த  நிலையில் இந்த வெடிபொருள் கேரளாவுக்கு  கொண்டு வரப்பட்டுள்ளதாக உளவுத்துறை போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இது  போலீசுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இருப்பினும் இந்த  வெடிபொருளை அவர்கள் எங்கு  பங்கி வைத்துள்ளனர்? இதை வைத்து அடுத்து என்ன  செய்ய திட்டமிட்டுள்ளனர் என்பன போன்ற தகவல்கள் இதுவரையிலும்  கிடைக்கவில்லை.இலங்கையை போன்று கேரளாவில் ஏதாவது சதி  திட்டத்துக்காக இந்த வெடிபொருட்களை தீவிரவாதிகள் பதுக்கி வைத்து  இருக்கின்றார்களா? என்ற கோணத்திலும் விசாரணை நடந்து வருகிறது. இது தொடர்பாக  போலீசார் ரகசியமாக  விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் கேரளாவில்  தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.இதற்கிடையே  முகமது பைசலின் கொல்லத்தில் உள்ள வீட்டில் போலீசார் தீவிர சோதனையில்  ஈடுபட்டனர். போலீஸ் கமிஷனர் மது தலைமையில் இந்த சோதனை நடைபெற்றது.   தொடர்ந்து பைசலின் உறவினர் வீடுகளிலும் இந்த  சோதனை நடந்தது. இதற்கிடையே பைசலுக்கு கொல்லம் ஓச்சிராவில் ஒரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதும்  தெரியவந்து உள்ளது. அந்த பெண் யார்? பைசலுக்கு அந்த பெண் உறவுக்காரரா? அல்லது நண்பரா? என்பன போன்ற  தகவல்கள்  எதுவும் வெளியாகவில்லை. அந்த பெண் உள்பட 10 பேரை  போலீசார் ரகசியமாக கண்காணித்து வருகின்றனர்.



Tags : ISI ,activists ,Kerala , terrorists, Hoarding , explosives, Kerala
× RELATED கோவில்பட்டியில் இந்தியா கூட்டணி...