×

விராட் போர்க் கப்பலை ராஜிவ் பயன்படுத்தவில்லை: மாஜி கடற்படை தளபதி விளக்கம்

புதுடெல்லி: ‘ஐஎன்எஸ் விராட் போர்க்கப்பலை தனது சொந்த சுற்றுலாவுக்கு ராஜீவ் காந்தி பயன்படுத்தவில்லை’ என்று கடற்படை முன்னாள் தளபதி அட்மிரல் ராமதாஸ் விளக்கம் அளித்துள்ளார். ‘இந்திய கடற்படைக்கு சொந்தமான விமானத் தாங்கி கப்பலான ஐஎன்எஸ் விராட்டை, தனது குடும்பத்துடன் சுற்றுலா செல்வதற்கு ராஜீவ் காந்தி பிரதமராக இருந்தபோது பயன்படுத்தினார்’ என பிரதமர் மோடி நேற்று முன்தினம்  குற்றம்சாட்டினார். இதற்கு பல்வேறு கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், மோடியின் குற்றச்சாட்டை கடற்படை முன்னாள் தளபதி அட்மிரல் ராமதாஸ் மறுத்துள்ளார்.

இது தொடர்பாக நேற்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘எந்த கடற்படை போர்க்கப்பலும் காந்தி குடும்பத்தின் சொந்த பயன்பாட்டுக்காக பயன்படுத்தபடவில்லை. ஆனால், லட்சத்தீவில் நடைபெற்ற ஆய்வு கூட்டத்துக்கு அப்போது பிரதமராக  இருந்த ராஜீவ் காந்தி தனது மனைவி, மகனுடன் அலுவலக ரீதியாகவே சென்றார். அங்கு பிரதமருக்கு அவசர மருத்துவ உதவி தேவைப்பட்டால் உதவுவதற்காக சிறிய ரக ஹெலிகாப்டர் மட்டுமே சென்றது. அப்போது, அந்த கப்பலின் கேப்டனாக  இருந்த அட்மிரல் பஷ்ரிச்சா, கமாண்டிங் அதிகாரி அட்மிரல் அருண் பிரகாஷ் மற்றும் துணை அட்மிரல் மதன்ஜித் சிங் ஆகியோர் அளித்த எழுத்துப்பூர்வமான அறிக்கை அடிப்படையில் இதை தெரிவிக்கிறேன்’ என கூறியுள்ளார்.


Tags : Rajiv ,Virat War ,Commander ,Magi Navy , Viagra ,ship, Rajiv , Explanation , Magi Navy commander
× RELATED ஷர்மிளா தற்கொலை விவகாரம்:...