×

நகை திருடுபோன விவகாரம் பாடலாசிரியரை 3வது மாடியில் இருந்து கீழே தள்ளிவிட முயற்சி: நடிகர் பார்த்திபன் மீது கமிஷனர் அலுவலகத்தில் பரபரப்பு புகார்

சென்னை: சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கே.கே.நகர் காமராஜர் சாலையை ேசர்ந்த திரைப்பட பாடல் ஆசிரியர் ஜெயம்கொண்டான்(எ) மகேஷ் என்பவர் நேற்று அளித்த புகாரில் கூறியிருப்பதாவது:நான் சினிமாவில் பாடல் ஆசிரியராக பாடல் எழுதி வருகிறேன். நடிகர் பார்த்திபன் இயக்குநர் என்ற முறையில் 10 ஆண்டுகளாக எனக்கு நன்றாக தெரியும். இதனால் அவரின் அலுவலகம், வீடு, தோட்ட வேலைகளை செய்து வந்தேன். தற்போது  எடுத்துக் கொண்டு இருக்கும் ஒத்த செருப்பில் பணிபுரிந்து வருகிறேன்.
பொருட்கள் காணவில்லை என்ற சந்தேகத்தின் பெயரில் என்னையும் உதவி இயக்குநர்கள், வீட்டில் வேலை செய்யும் பெண் மற்றும் வந்து போனவர்களை விசாரித்தார்.

 கடந்த ஆண்டு திருவான்மியூர் காவல் நிலையத்தில் விசாரணை செய்து எந்தவிதமான தவறும் இல்லை என்று எல்லோரையும் அனுப்பி விட்டனர். பின்னர் அவர்களை வேலையில் இருந்து நீக்கிவிட்டார். என்னிடம் மட்டும் தொடர்பில்  இருந்தார். போன வாரம் பார்த்திபனால் நீக்கப்பட்ட ஒருவரிடம் இவரது தோட்ட வேலை காரணமாக ஒரு முகவரி கேட்டேன். இவரது வேலைக்காக முகவரி கேட்ட என்னை நேற்று முன்தினம் 3 மணியளவில் நுங்கம்பாக்கம் 4 பிரேம்  தியேட்டரில் 3வது மாடியில் ைவத்து நடிகர் பார்த்திபன் மற்றும் அவரது உதவியாளர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் அடித்து உதைத்து மாடியில் இருந்து கீழே தள்ளிவிட பார்த்தனர். நான் அவர்களிடம் இருந்து தப்பித்து வந்துவிட்டேன். நடிகர்  பார்த்திபனால் என் உயிருக்கு ஆபத்து நேரிடும் என்பதால் எனக்கு தக்க பாதுகாப்பு வழங்க வேண்டும்.இவ்வாறு புகாரில் கூறியுள்ளார்.

Tags : jewelery ,Parthiban ,songwriter ,actor commissioner office , Jewelery, stolen affair, Complaint ,actor Parthiban
× RELATED 3 நகை பட்டறைகளில் வருமானவரி சோதனை