×

வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட தகவல்களை கூகுள் விற்காது: கூகுள் சிஇஓ சுந்தர்பிச்சை தகவல்

நியூயார்க்: “கூகுள் நிறுவனம் வாடிக்கையாளர்களின் எந்த தனிப்பட்ட தகவலையும் ஒருபோதும் மூன்றாவது நபருக்கு விற்பனை செய்யாது” என அதன் தலைமை செயல் அதிகாரி சுந்தர்பிச்சை தெரிவித்துள்ளார். கூகுள் சமூக வலைதளம் மூலமாக அதன் பயன்பாட்டாளர்களின் தனிப்பட்ட தகவல்கள் மூன்றாம் நபர்களுக்கு செல்வதாக குற்றச்சாட்டு எழுந்து வருகின்றது. இந்நிலையில் கூகுள் எந்த தகவலையும் ஒருபோதும் விற்காது என அதன் தலைமை செயல்அதிகாரி சுந்தர்பிச்சை தெரிவித்துள்ளார். நியூயார்க்கில் கூகுள் தலைமை செயல் அதிகாரி சுந்தர்பிச்சை அளித்த பேட்டி: வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட விஷயங்கள் சொகுசுப் பொருட்கள் கிடையாது. அவற்றை யாரும் விலை கொடுத்து வாங்க முடியாது. தனியுரிமை என்பது  தற்போதுள்ள விவாதிக்கப்படும் தலைப்புக்களில் முக்கிய ஒன்றாக இடம்பிடித்துள்ளது. தனியுரிமையை உண்மையானதாக இருப்பதற்காக உங்கள் தரவுகளை சுற்றி தெளிவான, அர்த்தமுள்ள தேர்வுகளை நாங்கள் வழங்குகிறோம்.

கூகுள் ஒருபோதும் தனிப்பட்ட தகவல்களை மூன்றாம் நபருக்கு விற்பனை செய்யாது மற்றும் உங்கள் தகவல் எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது என்பதை நீங்களே முடிவுசெய்து கொள்வது ஆகிய இரண்டு மட்டுமே கூகுளின் வெளிப்படை கொள்கையாக இருக்கிறது. ஒரு குடும்பம் இன்டெர்நெட்டை ஒரு கருவி மூலமாக பகிரும்போது தனியுரிமை என்பது ஒருவரிடம் இருந்து மற்றொருவரிடமும் செல்கிறது. ஒரு சிறு தொழில் செய்யும் உரிமையளார் கிரெடிட் கார்டு சேவைகளை வழங்குவதற்கு விரும்பும்போது தனியுரிமை என்பது வாடிக்கையாளர் தகவல் பாதுகாப்பு என மாறுகிறது. ஒரு இளைஞர் தனது செல்பியை பகிர்ந்து கொள்ளும்போது தனியுரிமை என்பது  எதிர்காலத்தில் அந்த புகைப்படத்தை அழிப்பது வரை இருக்கிறது.

தனியுரிமை என்பது நிறுவனங்கள் தங்கள் தரவை எப்படி பயன்படுத்தினார்கள் என்பதை பற்றி மக்களுக்கு தெளிவாக்குவதற்காக தனிப்பட்ட தேர்வுகள் மிகவும் முக்கியமாகிறது. உலகம் முழுவதும் உள்ள மக்களுக்கு தனியுரிமை பாதுகாப்பு கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் செயல்படுவதற்கு கூகுள் போன்ற நிறுவனங்களுக்கு சட்டம் உதவியாக இருக்கும். ஆனால் நாங்கள் அதற்காக காத்திருக்கவில்லை. வழிநடத்தவேண்டிய பொறுப்பு எங்களுக்கு இருக்கிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Tags : Google ,customer , Customer, Info, Google does not sell, Google CEO
× RELATED கொழுப்பு சத்து குறைக்க மருந்து சாப்பிட்ட 5 பேர் பலி