×

காதல் கொலைகளுக்கு தண்டனை விதிக்கும் சட்டம் இயற்ற வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: காதல் கொலைகளுக்கு கடும் தண்டனை வழங்கும் வகையில். வரும் சட்டப்பேரவை கூட்டத்தில் சட்டம் இயற்ற வேண்டும் என்று ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். பாமக நிறுவனர் ராமதாஸ் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தை அடுத்த கறிவேப்பிலங்குறிச்சியில் காதலிக்க மறுத்ததற்காக திலகவதி என்ற கல்லூரி மாணவியை, அதே பகுதியைச் சேர்ந்த இளைஞர்  ஒருவர் கொடூரமான முறையில் கத்தியால் குத்தி கொலை செய்திருக்கிறார். காதலிக்க மறுத்ததற்காக அப்பாவிப் பெண்ணை கொலை செய்திருப்பது கடுமையாக தண்டிக்கத்தக்கது.

திலகவதியை இழந்த அவரது குடும்பம் துயரத்தில் மூழ்கியுள்ளது. நாடகக் காதல் மற்றும் ஒருதலைக் காதல் செய்வதையும், அதையே முதலீடாகக் கொண்டு பணம் பறிப்பதையும் வாடிக்கையாக வைத்திருக்கும் கும்பலைச் சேர்ந்த ஆகாஷ் தம்மை காதலித்தே தீர வேண்டும் என்று திலகவதியை கட்டாயப்படுத்தி இருக்கிறான். அதற்கு  திலகவதி மறுத்து விட்டதால், அவரை வெறித்தனமாக கொலை செய்திருக்கிறான். காதலிக்க மறுக்கும் பெண்களை கொடூரமான முறையில் குத்தியும், வெட்டியும் கொலை செய்வது இது முதல் முறையல்ல.

ஒரு தலைக் காதல் கொலைகளில் பெரும்பாலானவை அவற்றையே பிழைப்பாகக் கொண்டிருக்கும் ஒரு கும்பலால் நடத்தப்பட்டவை தான். இத்தகைய குற்றவாளிகள் அனைவருக்கும் ஒரு கும்பல் அனைத்து வகையிலும் பாதுகாப்பாக இருப்பது தான் இத்தகைய குற்றங்கள் தொடரவும், அதிகரிக்கவும் காரணமாக அமைகின்றன.

நாடகக் காதல் மற்றும் ஒருதலைக் காதல் கொலைகளை திட்டமிட்டு அரங்கேற்றுவது சமுதாயத்தில் மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். பெண் குழந்தைகளை பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு அனுப்பவே தயங்கும் நிலை உருவாகியுள்ளது. நாடகக் காதல் மற்றும் ஒருதலைக் காதல் கொலைகளில் ஈடுபடும் மனித மிருகங்களை மிகக் கடுமையாக தண்டிக்க வேண்டும். அதற்கு ஏற்ற வகையில்  கடுமையான சட்டத்தை வரும் சட்டப்பேரவைக் கூட்டத்தில் இயற்ற தமிழக அரசு முன்வர வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags : killings ,Ramadoss , Love murder, punishment, rule, law, Ramadoss
× RELATED வெந்நீரை கொட்டினா மாதிரி கொதிக்குது...