×

டெட் தேர்வு விவகாரம் ஆசிரியர்களை பணி நீக்கும் உத்தரவை திரும்ப பெற வேண்டும்: ஜாக்டோ-ஜியோ கோரிக்கை

சென்னை: ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாத ஆசிரியர்களை பணியில் இருந்து நீக்கிய உத்தரவை அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும். நிறுத்தி வைக்கப்பட்ட ஏப்ரல் மாத சம்பளத்தையும் உடனடியாக வழங்க வேண்டும் என்று ஜாக்டோ-ஜியோ கேட்டுக் கொண்டுள்ளது.
ஜாக்டோ-ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டம் சென்னையில் நேற்று நடந்தது. இந்த கூட்டத்துக்கு ஒருங்கிணைப்பாளர் சுப்பிரமணியன், ஆறுமுகம், மோசஸ் ஆகியோர் தலைமை தாங்கினர்.

இதில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் குறித்து ஒருங்கிணைப்பாளர் சுப்பிரமணியன் கூறியதாவது: தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளாக இடைநிலை ஆசிரியர்களாக பணியாற்றிய 1500 ஆசிரியர்கள், ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறவில்லை என்று காரணம் காட்டி நீதிமன்ற உத்தரவுப்படி பணி நீக்கம் செய்துள்ளதை அரசு கைவிட வேண்டும். மேலும் ஏப்ரல் மாத சம்பளத்தை நிறுத்தி வைத்துள்ளதை திரும்ப வழங்க வேண்டும். இந்த 1500 ஆசிரியர்களும் தகுதித் ேதர்வு எழுதுவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும்.

தமிழக அரசு 1.1.2019ம் தேதி முதல் வழங்க வேண்டிய அகவிலைப் படியை தாமதிக்காமல் அரசு ஊழியர்களுக்கு வழங்க வேண்டும். ஆசிரியர்கள், அரசு ஊழியர்களை கைது செய்து 17பி ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதை ரத்து செய்து அவர்களுக்கான பதவி உயர்வு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். போராட்டத்தில் ஈடுபட்ட 17 கல்லூரி பேராசிரியர்களை மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் செய்ததையும் ரத்து செய்து, ஏற்கெனவே பணியாற்றிய இடத்தில் தொடர்ந்து பணியாற்ற உயர் கல்வித்துறை செயலாளர் உத்தரவிட வேண்டும்.

Tags : affair ,teachers ,TED Exam , TED Selection, Affair, Workers' Teachers, Jacotto-Joy, Request
× RELATED பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு இந்தியா கூட்டணிக்கு ஆதரவாக பிரசாரம்