×

கெங்கவல்லி சுற்றுவட்டார பகுதியில் பலத்த சூறைக்காற்றுடன் ஆலங்கட்டி மழை: 300 வாழை மரங்கள் சேதம்; 47 மிமீ மழை பதிவானது

கெங்கவல்லி: தமிழகத்தில் பிப்ரவரி மாதம் முதலே கோடை வெயில் வாட்டி வந்தது. கடந்த வாரம் அக்னி நட்சத்திரம் தொடங்கியதால் பொதுமக்கள் வெளியே செல்வதற்கே பயந்தனர். இந்நிலையில் சேலம் மாவட்டம், கெங்கவல்லி அடுத்த வீரகனூர் சுற்றுவட்டார  பகுதிகளில் நேற்று பலத்த சூறைகாற்றுடன் கூடிய மழை பெய்தது. இதில், வீரகனூர் அருகே உள்ள பகடப்பாடி, வெள்ளையூர்  கிராமத்தில்  ஆலங்கட்டி மழை  பெய்ததால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர். வீரகனூர் பகுதியில் பெய்த மழையால் சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள மின்கம்பங்கள் சாய்ந்து மின்சாரம் துண்டிக்கப்பட்டது. கெங்கவல்லியில் 47 மிமீ மழை பதிவாகியுள்ளது. வீரகனூரை அடுத்த நல்லூரை சேர்ந்தவர் விவசாயி ராஜேந்திரன்(42). இவரது வீட்டில் கால்நடைகள் வளர்த்து வருகிறார்.

இந்நிலையில் பெய்த மழையினால் வீட்டின் அருகே இருந்த பனைமரம் விழுந்ததில் பசுமாடு உயிரிழந்தது. இதேபோல் லத்து வாடி பகுதியிலும் நான்கு விவசாயி தோப்புகளில் 300க்கும் மேற்பட்ட வாழைமரங்கள் அடியோடு சாய்ந்தது. இது குறித்து வீரகனூர் வருவாய் ஆய்வாளர் சங்கரி மற்றும் விஏஓ கலியமூர்த்தி ஆகியோர் சம்பவயிடத்திற்கு சென்று சேதாரம் குறித்து ஆய்வு செய்தனர். இதேப்போல், இடைப்பாடி, கொங்கணாபுரம் , ரங்கம்பாளையம், மூலப்பாதை, கல்லுக்கடை, வெள்ளரி வெள்ளி, வெள்ளாண்டிவலசு, குள்ளம்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று இரவு பலத்த மழை பெய்தது. இதில் பல்வேறு இடங்களில் பனைமரம், வாழைமரம், இளவஞ்சி மரம், பப்பாளி மரம் ஆகியவை காற்றுக்கு சாய்ந்தது. மேலும், தாழ்வான பகுதிகளில் மழைநீர்  தேங்கி நின்றது.

Tags : Kangavalli ,snowfall ,area , Kanavalli, sulcus, hail rain, banana trees, rain
× RELATED ராட்சத அலையில் சிக்கியவர் பலி