×

அமெரிக்கா மற்றும் சீனா இடையே வர்த்தக மோதல் எதிரொலி: பங்குச்சந்தைகள் கடும் சரிவு

மும்பை: தொடர்ந்து 7வது நாளாக பங்குச்சந்தைகள் கடும் சரிவை சந்தித்துள்ளன. இந்த வாரம் துவங்கியதில் இருந்தே பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சியை சந்தித்து வருகின்றன. சீன பொருட்கள் மீது கூடுதல் வரி விதிப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்ததை தொடர்ந்து ஆசிய சந்தைகளும் ஆட்டம் காண தொடங்கிவிட்டன. அமெரிக்கா மற்றும் சீனா இடையே வர்த்தக மோதல் நீடித்து வருகிறது.

மும்பை பங்குச்சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 230.22 புள்ளிகள் சரிந்து 37,558.91 புள்ளிகளில் உள்ளது. தேசிய பங்குச்சந்தையின் குறியீடான நிஃப்டியானது 57.65 புள்ளிகள் சரிந்து 11,301.80 புள்ளிகளில் உள்ளது. இந்திய பங்குச்சந்தைகள் இன்று சரிவை சந்தித்தன. ஆசிய பங்கின் பலவீனமான வர்த்தகம் இந்திய பங்குச்சந்தையை வெகுவாக பாதித்துள்ளது.

வங்கி மற்றும் எனர்ஜி, பார்மா பங்குகள் சரிவை சந்தித்தன. ஊடகம் மற்றும் மெட்டல் பங்குகள் சற்று உயர்ந்தது. ஜீ என்டர்டைன்மெண்ட், எஸ் பேங்க், பஜாஜ் ஃபின்செர்வ், பஜாஜ் ஃபைனான்ஸ், ஹீரோ மோட்டோகார்ப் பங்குகள் மதிப்பு அதிகரித்தது. ரிலையன்ஸ், பிபிசிஎல், கோல் இந்தியா, ஏசியன் பெயிண்ட், கோட்டாக் பேங்க் பங்குகள் மதிப்பு சரிந்தது.

அமெரிக்கா - சீனா வர்த்தகத்தில் உள்ள பதற்றமான நிலை ஆசிய பங்குச்சந்தையில் சரிவை ஏற்படுத்தியது. பங்கு மதிப்புகள் சரிந்ததற்கு சீனாவுக்கு அமெரிக்கா விடுத்த வரி விதிப்பு மட்டும் காரணம் அல்ல. நிறுவனங்களின் 4ம் காலாண்டு முடிவுகளும் ஒரு காரணம். அதோடு, தேர்தல் முடிவு நெருங்குவதால் முதலீட்டாளர்கள் அதிக கவனத்துடன் பங்கு பரிவர்த்தனையை கையாண்டு வருகின்றனர். இதுவும் சந்தை இறக்கத்துக்கு காரணம் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

Tags : trade conflict ,China ,US ,collapse , Stock market, China, USA
× RELATED டிக்டாக் செயலியை தடை செய்வதற்கான...