×

மோடியின் ஆட்சியில் ஏற்பட்ட பொருளாதார பின்னடைவை சீர்படுத்த பல ஆண்டுகள் தேவைப்படும்: கபில் சிபல் ஆவேசம்

டெல்லி: நரேந்திர மோடியின் ஆட்சியில், நாட்டின் பொருளாதாரம் கடும் பின்னடைவைச் சந்தித்துள்ளதாகவும், அதை சீர்படுத்த பல ஆண்டுகள் தேவைப்படும் என்றும் காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபல் தெரிவித்துள்ளார். டெல்லியில்  செய்தியாளர்களிடம் பேசிய கபில் சிபல், மறைந்த முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி மீது குற்றம் சாட்டுவது உள்பட தனி நபர் தாக்குதல்களை நரேந்திர மோடி மேற்கொண்டு வருவதாகக் குற்றம் சாட்டியுள்ளார். பிரதமராக இருப்பவர் எவ்வாறு  பேச வேண்டுமோ அவ்வாறு மோடி பேசுவதில்லை என்றும், தரமற்ற வார்த்தைகளை அவர் பயன்படுத்தி வருவதாகவும் கபில் சிபல் குறிப்பிட்டுள்ளார்.

தமது தலைமையிலான அரசு கடந்த 5 ஆண்டுகளில் என்ன சாதித்தது என்பது குறித்து நரேந்திர மோடி தெரிவிக்க வேண்டும் என்றும் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்துவது குறித்தோ, பொருளாதாரத்தை மேம்படுத்துவது  குறித்தோ நரேந்திர மோடி பேசுவதில்லை என விமர்சித்துள்ள கபில் சிபல், மீண்டும் ஆட்சிக்கு வர முடியாது என்பது தெரிந்துவிட்டதால், மற்றவர்கள் மீது குற்றம் சுமத்துவதில் மட்டுமே கவனம் செலுத்தி வருவதாகக் கூறியுள்ளார்.

Tags : Modi ,Kapil Sibal , Modi's regime, recession, years, Kapil Sibal
× RELATED முஸ்லீம்கள் குறித்து சர்ச்சை கருத்து:...