×

பாரீசிலிருந்து மும்பை நோக்கி வந்த AirBus A340 பயணிகள் விமானம் கோளாறு காரணமாக ஈரானில் தரையிறக்கம்

பாரீசில்: பிரான்ஸ் தலைநகர் பாரீசிலிருந்து  இந்தியாவின் மும்பை நோக்கி வந்த பயணிகள் விமானம், ஈரான் நாட்டில் திடீரென தரையிறக்கப்பட்டது. ஜூண்  நிறுவனத்தின், AirBus A340 என்ற வகையைச் சேர்ந்த விமானம், பாரீஸ் நகரிலிருந்து, மும்பைக்கு பயணமானது. ஈரான் வான்பகுதியில் பறந்து கொண்டிருந்தபோது, விமானத்தின் காற்றோட்ட அமைப்பில், கோளாறு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, ஈரான் நாட்டின் மத்திய பகுதியில் அமைந்துள்ள இஸ்ஃபாகான் நகர விமான நிலையத்தில் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டது.

இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள ஜூண் நிறுவனம், முன்னெச்செரிக்கை நடவடிக்கையாகவே விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டதாகத் தெரிவித்திருக்கிறது. பயணிகள் யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை என்றும், வேறு விமானங்களில் மும்பைக்கு பயணிகள் அனுப்பி வைக்கப்பட்டதாகவும் ஜூண் விமான நிறுவனம் கூறியிருக்கிறது.


Tags : passenger plane crash ,Paris , AirBus A340,passenger, plane,fault, Paris
× RELATED பாரிஸின் புகழ்பெற்ற நோட்ரே-டேம்...