×

அண்ணா பல்கலை., உறுப்பு கல்லூரிகளில் கட்டணத்தை 3 மடங்கு உயர்த்த பரிந்துரை: பதிவாளர் குமார் தகவல்

சென்னை: பொறியியல் படிப்பில் 10 ஆண்டுகளுக்கு முன்பு தேர்வில் தோல்வியடைந்தவர்களுக்கு மீண்டும் தேர்வு எழுத வாய்ப்பு அளிக்க சென்னையில் நடந்த அண்ணா பல்கலைக்கழக்கழக சிண்டிகேட் குழு கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் நலன் கருதி வரும் நவ./டிச. செம்ஸ்டர் தேர்வில் அவர்களுக்கு கடைசியாக ஒரே ஒரு வாய்ப்பு வழங்கப்பட உள்ளது. பாடத்திட்டம் மற்றும் மறு மதிப்பீடு முறையில் கொண்டுவரப்பட்டுள்ள மாற்றங்களுக்கு ஒப்புதல் பெறுவதற்கான அண்ணா பல்கலைக்கழகத்தில் சிண்டிகேட் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. அதில், அண்ணா பல்கலைக்கழகத்தில் முக்கிய வளாக கல்லூரிகளான அண்ணா பல்கலைக்கழகம், கிண்டி பொறியியல் கல்லூரி, அழகப்பா டெக்னாலஜி, எம்ஐடியில் மாற்றப்பட்ட புதிய பாடத்திட்டத்தை 2019 - 2020ம் கல்வியாண்டில் அறிமுகப்படுத்த இந்த கூட்டத்தில் ஒப்புதல் பெறப்படவுள்ளது.

மேலும் இந்த 4 கல்லூரிகளில் மட்டும் மாணவர்கள் முன்பு மறுகூட்டல் செய்யும் விதத்தில் மாற்றப்பட்டுள்ள மறு மதிப்பீடு முறை மற்றும் பலக்லைக்கழகத்தின் பொறுப்பு பதிவாளராக 1 வருடத்திற்கு மேல் இருந்து வரும் பேராசிரியர் குமார் வரும் ஜூன் மாதம் ஓய்வு பெற உள்ள நிலையில் பலக்லைக்கழகத்திற்கு நிரந்தர பதிவாளரை நியமிப்பது உள்ளிட்டவைக்கும் ஒப்புதல் பெற கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் சிண்டிகேட் கூட்டம் துணைவேந்தர் சூரப்பா தலைமையில் நடைபெற்று வருகிறது. இதனிடையே, கல்வி கட்டணம் உயர்வு குறித்து ஏற்கனவே அரசு பரிசீலனையில் உள்ளது என்று அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் குமார் தகவல் தெரிவித்துள்ளார். அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் உறுப்பு கல்லூரிகளில் கட்டணத்தை 3 மடங்கு உயர்த்த பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

ரூ. 6000-ஆக இருந்த கட்டணத்தை ரூ.20,000-ஆக நிர்ணயிக்க ஆலோசனை கூட்டத்தில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் குமார் தெரிவித்துள்ளார். இது ஏற்கனவே முடிவு செய்யப்பட்டிருந்ததாகவும், அரசின் ஒப்புதலுக்காக காத்திருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். கட்டணத்தை உயர்திவதற்கான காரணம் குறித்து அவர் கூறுகையில், அண்ணா பல்கலை. கீழ் இயங்கக்கூடிய 17 உறுப்புகல்லூரிகளுக்கான கட்டமைப்பு வசதிகள் மற்றும் பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள் ஆகியோரின் மாத சம்பளங்களை அண்ணா பல்கலைக்கழகமே வழங்கி வருவதன் காரணமாக கடுமையான நிதி நெருக்கடியை சந்தித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

இதன் காரணமாகவே கட்டணத்தை உயர்த்த அண்ணா பல்கலைக்கழகம் முடிவு செய்திருப்பதாக அவர் கூறியுள்ளார். ஏற்கனவே 10% அளவிற்கு கட்டணம் உயர்த்தப்படும் என்று தகவல்கள் வெளியான நிலையில், தற்போது ஆண்டு கட்டணத்தை 3 மடங்கு உயர்த்த முடிவு செய்யப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த கட்டண உயர்வுக்கு உயர்கல்வித்துறை தற்போது வரை அனுமதி அளிக்கவில்லை எனவும் கூறப்படுகிறது. அரசு அனுமதி அளித்த பிறகே கட்டணத்தை உயர்த்த முடியும் என்ற பட்சியத்தில், கட்டணத்தை உயர்த்துவதில் அண்ணா பல்கலைக்கழகம் உறுதியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Anna University ,Organizing Colleges , Anna University, Element College, Fees, Promotion
× RELATED பதிவாளர் நியமனம் தொடர்பாக அண்ணா...