மும்பை அணி கேப்டன் ரோகித் சர்மா அவரது மனைவியுடன் திருப்பதியில் சாமி தரிசனம்

திருமலை: ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் சென்னை அணியை வீழ்த்தி மும்பை அணி இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது. வருகிற 12-ம் தேதி இரவு ஐதராபாத்தில் இறுதி போட்டி நடக்கிறது. மும்பை அணி கேப்டன் ரோகித் சர்மா அவரது மனைவி ரித்திகா, குழந்தை சமைரா ஆகியோருடன் இன்று காலை திருப்பதி வந்தார். காலை 5 மணிக்கு ஏழுமலையான் கோவிலுக்கு சென்று வி.ஐ.பி. பிரேக் தரிசனத்தில் சாமி தரிசனம் செய்தார்.

தேவஸ்தான அதிகாரிகள் அவரை வரவேற்று லட்டு பிரசாதம் வழங்கினர். 6 மணிக்கு கோவிலில் இருந்து புறப்பட்டு சென்றார். ஐ.பி.எல். இறுதி போட்டியில் வெற்றி பெற வேண்டி அவர் சாமி தரிசனம் செய்ததாக உடன் வந்தவர்கள் தெரிவித்தனர். கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் இன்று காலை சுப்ரபாத தரிசன சேவையில் ஏழுமலையானை தரிசனம் செய்தார்.

Tags : Rohit Sharma ,Mumbai ,darshan ,Tirupati ,Sami , Mumbai team ,captain Rohit Sharma,wife,Sami darshan,Tirupati
× RELATED உண்மை, சேவைக்காக அர்ப்பணிக்கப்பட்ட...