×

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலைப்படைத் தாக்குதலில் 4 பேர் உயிரிழப்பு: 25 பேர் படுகாயம்

காபூல்: ஆப்கானிஸ்தான் நாட்டில் அந்நாட்டின் அரசுக்கும், அங்கு செயல்பட்டு வரும் பயங்கரவாத அமைப்புக்கும் பல ஆண்டுகளாக போர் நடந்து வருகிறது. ஆப்கானிஸ்தானில் நடத்தப்பட்ட தற்கொலைப்படைத் தாக்குதலில் குறைந்தது 4 பேர் கொல்லப்பட்டுள்ளனர். தலைநகர் காபூலில் உதவி மையம் ஒன்றில் நின்றிருந்த பொதுமக்களைக் குறிவைத்து இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. கூட்டத்தோடு மறைந்திருந்த பயங்கரவாதிகள் குண்டுகளை வெடிக்கச் செய்ததில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதுவரை ஏராளமான பொதுமக்களும், பாதுகாப்பு படை வீரர்களும் உயிரிழந்துள்ளனர்.

ஆப்கானிஸ்தானில் நடைபெற்றுள்ள மூன்றாவது பயங்கரவாத தாக்குதல் இது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் 25 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் பெரும்பாலானோர் உயிர்பிழைக்க வாய்ப்பு இல்லை என அதிகாரிகள் தெரிவித்தனர். இந்தத் தாக்குதலுக்கு தாலிபான் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது என கூறப்படுகிறது. இஸ்லாமியர்கள் கொண்டாடும் புனித ரமலான் மாதத்தில் நடந்துள்ள 3-வது தாக்குதல் இது என்பது குறிப்பிடத்தக்கது.


Tags : Kabul ,suicide attack ,Afghan , 4 dead, 25 injured , suicide attack, Afghanistan, Kabul
× RELATED ஆப்கானிஸ்தானில் 13 வயதிற்கு மேல் பெண்கள் பள்ளிகளுக்கு செல்ல தடை