தயாரிப்பாளர் சங்கத்துக்கு நிர்வாக குழு நியமனம்

சென்னை: நடிகர் விஷால் தலைமையில் தயாரிப்பாளர் சங்கம் செயல்பட்டு வந்தது. ஒரு பிரிவு தயாரிப்பாளர்கள் தமிழக அரசிடம் புகார் கொடுத்ததை தொடர்ந்து சங்கத்தை நிர்வகிக்க தமிழக அரசு பதிவுத்துறை அதிகாரி என்.சேகர் என்பவரை தனி அதிகாரியாக நியமித்துள்ளது. தற்போது தனி அதிகாரி சேகர் தயாரிப்பாளர் சங்கத்தில் உள்ள உறுப்பினர்களை கொண்டு தனக்கு உதவி செய்ய தற்காலிக குழு ஒன்றை (அட்ஹாக் கமிட்டி) அமைத்துள்ளார். இதில் பாரதிராஜா, டி.ஜி.தியாகராஜன், கே.ராஜன், டி.சிவா, சிவசக்தி பாண்டியன், எஸ்.வி.சேகர், ஜே.எஸ்.கே.சதீஷ்குமார், எஸ்.எஸ்.துரைராஜ், கே.ராதாகிருஷ்ணன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

Tags : Executive Committee ,Producers' Association , Producer, Executive Committee, Appointment
× RELATED நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம்