×

மெட்ரோ நிர்வாகம் விளக்கம்: சுரங்கப்பாதையில் நீர்க்கசிவு ஏன்?

சென்னை: சென்ட்ரல் மெட்ரோ ரயில்நிலையத்தில் நீர்கசிவு ஏற்படுவதாக பயணிகளிடத்தில் இருந்து புகார் எழுந்தது. இது தொடர்பான செய்தி, நமது நாளிதழில் நேற்று முன்தினம் வெளியாகியிருந்தது. இந்நிலையில் இதுகுறித்து மெட்ரோ ரயில்வே நிர்வாகம் நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில் கூறப்பட்டுள்ளதாவது: தண்ணீர் தேங்குவதை வெளியேற்ற தேவையான பம்பிங் வசதி அனைத்து மெட்ரோ ரயில் நிலையங்களிலும் உள்ளது. மெட்ரோ ரயில் நிலையங்கள், மற்றும் ரயில் பாதைகள் அதிநவீன பாதுகாப்பு அம்சங்களை கொண்டு கட்டமைக்கப்பட்டுள்ளது. தண்ணீரை பாதையில் செலுத்தி பின்னர் அகற்றுவது வழக்கமான நடைமுறை தான். வெள்ளமே வந்தாலும் அதை வெளியேற்றுவதற்கான வடிகால் வசதி, சுரங்கப்பாதையில் உள்ளது.

Tags : tunnel ,subway , Metro administration, tunnel, waterproof,
× RELATED ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதை ஒருவழிப்பாதையாக மாற்றம்..!!