×

சென்னை துறைமுகத்தில் பரபரப்பு 7.11 கோடி தங்கம் சிகரெட் பறிமுதல்

சென்னை: சென்னை துறைமுகத்தில் இருந்து ஆடைகள் ஏற்றுமதி செய்வதாக கண்டெய்னர் மூலம் செம்மரக்கட்டைகள் கடத்தப்படுவதாக வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் சென்னை துறைமுகத்தில் சோதனை நடத்தினர். அப்போது சந்தேகத்திற்கு இடமான வகையில் இருந்த 2 கண்டெய்னரை சோதனை நடத்தியபோது, அதில் ஆடைகளுக்கு இடையே 14 மெட்ரிக்  டன் செம்மரக்கட்டைகள் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. உடனே செம்மரக்கட்டைகளை பறிமுதல் செய்தனர். அதேபோல் வெளிநாட்டில் இருந்து சென்னைக்கு சட்ட விரோதமாக கொண்டு வரப்பட்ட ₹4.5 கோடி மதிப்புள்ள 30 லட்சம்  வெளிநாட்டு சிகரெட்டுகள்  பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும், சென்னை விமான நிலையம் வழியாக 6 பேர் சிங்கப்பூருக்கு 352 விலை உயர்ந்த 180 கிலோ கொண்ட சங்குகள் கடத்த முயன்றதை வருவாய் புலனாய்வு அதிகாரிகள் பறிமுதல்  செய்தனர். அசாமில் இருந்து சென்னை எழும்பூர் வந்த எக்ஸ்பிரஸ் ரயில் கடத்தி வரப்பட்ட ₹2.61 கோடி மதிப்புள்ள 8 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.இந்த 4 வழக்குகளிலும் தொடர்புடைய 9 பேரை வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags : harbor ,Chennai , 7.11 crore ,gold cigarettes , Chennai harbor
× RELATED வாயால் மட்டுமே வடை சுட்டுக்கொண்டு...