×

பார்சிலோனா அதிர்ச்சி சாம்பியன்ஸ் லீக் பைனலில் லிவர்பூல்

லண்டன்: பார்சிலோனா அணியுடனான 2ம் கட்ட அரை இறுதியில் 4-0 என்ற கோல் கணக்கில் அபாரமாக வென்ற லிவர்பூல் அணி, சாம்பியன்ஸ் லீக் தொடரின் இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.நியூ கேம்ப்பில் நடந்த முதல் கட்ட அரை இறுதியில் பார்சிலோனா 3-0 என வென்று முன்னிலை வகிக்க, பரபரப்பான 2ம் கட்ட அரை இறுதி லிவர்பூல் அணியின் அன்பீல்டு மைதானத்தில் நடைபெற்றது. 7வது நிமிடத்திலேயே லீவர்பூல் வீரர்  ஒரிஜி அபாரமாக கோல் போட்டு அசத்தினார். பதில் கோல் அடிக்க பல வாய்ப்புகள் கிடைத்தும் அவற்றை பார்சிலோனா வீரர்கள் வீணடித்தனர். இடைவேளை வரை இதே நிலை நீடித்தது.

இரண்டாவது பாதியில் தாக்குதலை தீவிரப்படுத்திய லிவர்பூல் அணிக்கு விஜ்னால்டும் 54வது மற்றும் 56வது நிமிடங்களில் அடுத்தடுத்து கோல் அடித்து 3-0 என முன்னிலையை அதிகரித்தார். பார்சிலோனா நட்சத்திரங்கள் லியோனல் மெஸ்ஸி,  லூயிஸ் சுவாரெஸ் கடுமையாக முயற்சித்தும் பதில் கோல் அடிக்க முடியவில்லை. 79வது நிமிடத்தில் ஒரிஜி மேலும் ஒரு கோல் அடித்து அசத்தினார். விறிவிறுப்பான ஆட்டத்தின் முடிவில் 4-0 என வென்ற லிவர்பூர் அணி, மொத்த கோல்  அடிப்படையில் 4-3 என்ற கணக்கில் முன்னிலை பெற்றதால் சாம்பியன்ஸ் லீக் தொடரின் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. எதிர்பாராத இந்த அதிர்ச்சி தோல்வியால் பார்சிலோனா அணி வீரர்களும், ரசிகர்களும் மிகுந்த ஏமாற்றம் அடைந்தனர்.Tags : Liverpool ,Champions League ,Barcelona , Barcelona , Liverpool , Champions ,League final
× RELATED யுஇஎப்ஏ சாம்பியன்ஸ் லீக் மீண்டும் தொடக்கம்