வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக வங்கதேசம் அபார வெற்றி

டப்ளின்: அயர்லாந்தில் நடைபெறும் முத்தரப்பு ஒருநாள் போட்டித் தொடரின் லீக் ஆட்டத்தில், வங்கதேச அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தியது.டப்ளின் மைதானத்தில் நேற்று முன்தினம் நடந்த இப்போட்டியில், டாசில் வென்று பேட் செய்த வெஸ்ட் இண்டீஸ் 50 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 261 ரன் குவித்தது. தொடக்க வீரர் ஷாய் ஹோப் 109 ரன், அம்ப்ரிஸ் 38, ரோஸ்டன் சேஸ் 51,  நர்ஸ் 19 ரன் எடுக்க, மற்ற வீரர்கள் கணிசமாக ரன் குவிக்கத் தவறினர். வங்கதேச பந்துவீச்சில் மோர்டசா 3, சைபுதின், முஸ்டாபிசுர் தலா 2, ஷாகிப், மிராஸ் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

அடுத்து களமிறங்கிய வங்கதேசம் 45 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 264 ரன் எடுத்து வென்றது. தொடக்க வீரர்கள் தமிம் இக்பால் 80 ரன் (116 பந்து, 7 பவுண்டரி), சவும்யா சர்க்கார் 73 ரன் (68 பந்து, 9 பவுண்டரி, 1 சிக்சர்) விளாசி பெவிலியன்  திரும்பினர். ஷாகிப் அல் ஹசன் 61 ரன் (61 பந்து, 3 பவுண்டரி, 2 சிக்சர்), முஷ்பிகுர் ரகிம் 32 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். ஷாய் ஹோப் ஆட்ட நாயகன் விருது பெற்றார்.இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் அயர்லாந்து - வங்கதேசம் மோதுகின்றன.Tags : Bangladesh ,victory ,West Indies , Bangladesh's ,victory , West Indies
× RELATED மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான 3...