×

சில்லி பாயின்ட்...

* இந்திய விளையாட்டு ஆணையம்(சாய்) சார்பில் சென்னையில் உள்ள பயிற்சி மையத்தில் ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்ற கோமதி மாரிமுத்துவுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. நிகழ்ச்சியில் பயிற்சி மாணவர்களும்,  பெற்றோர்களும் கோமதிக்கு உற்சாக வரவேற்பு கொடுத்தனர். பயிற்சியாளர்கள் மனோகரன்(ஹாக்கி), லாரெல் ஷீலாராணி(வாலிபால்), திலீப்குமார் கன்டயாட் (தடகளம்) ஆகியோர் கோமதியை பாராட்டினர்.
* சோனி நிறுவனமும், அதன் விளம்பரத் தூதரான இந்தி நடிகர் பர்ஹான் அக்தரும்  இணைந்து ஐரோப்பிய சாம்பியன் போட்டியை மேலும் பிரபலப்படுத்தும் முயற்சியில்  ஈடுபட்டுள்ளனர். அதன் ஒருபகுதியாக ஸ்பெயின், மாட்ரிட் நகரில் ஜூன்  1ம் தேதி  நடைபெறும் போட்டியை காண நேரில் செல்கிறார் அக்தர். புது முயற்சியாக  போட்டிகளை சோனி டிவியில் மட்டுமின்றி சென்னை உட்பட நாடு முழுவதுமுள்ள  பிவிஆர் மால்களிலும் ஒளிபரப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
* லண்டன் கென்னிங்டன் ஓவல் மைதானத்தில் இங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகள் மோதிய முதல் ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது. மழை காரணமாக ஆட்டம் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டதால், தலா 47 ஓவர்கள் கொண்ட  போட்டியாக நடுவர்கள் அறிவித்தனர். டாசில் வென்ற இங்கிலாந்து முதலில் பந்துவீசியது.
* டெஸ்ட் போட்டிகளில் ஸ்பெஷலிஸ்ட் பேட்ஸ்மேனாக விளங்கும் செதேஷ்வர் புஜாராவை ஐபிஎல் அணிகள் எதுவும் ஏலத்தில் எடுக்க முன்வரவில்லை. இந்த நிலையில் அவர் முதல் முறையாக நடைபெற உள்ள சவுராஷ்டிரா பிரிமியர் லீக்  டி20 தொடரில் விளையாட உள்ளார். ராஜ்கோட்டில் வரும் 14ம் தேதி தொடங்கும் இத்தொடரில் மொத்தம் 5 அணிகள் பங்கேற்கின்றன. புஜாரா எந்த அணிக்காக களமிறங்குவார் என்பது இன்று அறிவிக்கப்பட உள்ளது.



Tags : Roulette, point
× RELATED 12 ரன் வித்தியாசத்தில் டெல்லியை...