×

தனிப்பட்ட முறையில் என்னை விமர்சனம் செய்வதை நிறுத்துங்கள்: மோடிக்கு ராபர்ட் வதேரா கோரிக்கை

புதுடெல்லி: ‘நாட்டில் எத்தனையோ பிரச்னை இருக்கும்போது என்னை தனிப்பட்ட முறையில் விமர்சனம் செய்வதை மோடி நிறுத்திக் கொள்ள வேண்டும்’ என ராபர்ட் வதேரா கோரிக்கை விடுத்துள்ளார். அரியானா மாநிலம், குருஷேத்ராவில் தேர்தல் பிரசாரம் செய்த பிரதமர் மோடி, சோனியாவின் மருமகன் ராபர்ட் வதேரா மீது பெயர் குறிப்பிடாமல் சில குற்றச்சாட்டுக்களை முன்வைத்தார்.

பிரசாரத்தில் மோடி பேசுகையில், டெல்லி மற்றும் அரியானாவில் விவசாயிகளின் நிலங்களை திருடியவர்களின் ஊழலை இந்த காவலாளி வெளிச்சத்துக்கு கொண்டு வந்தேன். தன்னை மன்னர்களாக கருதும் அவர்கள் அமலாக்கத் துறைக்கும், நீதிமன்றத்துக்கும் சென்று கொண்டிருக்கின்றனர். உங்கள் ஆசியால் விவசாயிகளுக்கு நீதி விரைவில் கிடைக்கும். ஊழல் செய்தவர்கள் சிறைக்கு செல்வார்கள்’ என்றார்.

இதற்கு பதில் அளிக்கும் வகையில் ராபர்ட் வதேரா தனது டிவிட்டரில் நேற்று வெளியிட்டுள்ள பதிவில், என்னை தனிப்பட்ட முறையில் விமர்சனம் செய்வதை நிறுத்துங்கள் மோடி. இது போன்ற குற்றச்சாட்டுக்களை கூறுவது நமது நீதிமன்ற முறையை அவமதிக்கும் செயலாகும். நான் இந்திய நீதிமுறையில் முழு நம்பிக்கை கொண்டுள்ளேன்.

கடவுள் இந்த நாட்டை காப்பாற்றுவார்’ என பதிவிட்டுள்ளார். இது தொடர்பாக தனது பேஸ்புக்கிலும் சில பதிவுகளை வதேரா வெளியிட்டுள்ளார். அதில் அவர், ‘கடந்த 5 ஆண்டுகளாக பல்வேறு தொல்லைகளுக்கு உள்ளாகி வருகிறேன். ஆனால், என் மீதான எந்த குற்றச்சாட்டும் இதுவரை நிருபணமாகவில்லை’ என கூறியுள்ளார்.

Tags : Robert Vadra ,Modi , Personally, critic, Modi, Robert Vadra, request
× RELATED பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார் நரேந்திர மோடி..!!