×

ஒடிசாவில் பானி புயல் பலி 41 ஆக உயர்ந்தது

புவனேஸ்வர்:  ஒடிசாவில் கடந்த வாரம் தாக்கிய பானி புயலுக்கு பலியானோர் எண்ணிக்கை 41 ஆக அதிகரித்துள்ளது. ஒடிசா மாநிலத்தின் பூரியில் கடந்த வெள்ளியன்று பானி புயல் கரையை கடந்தது. இதன் காரணமாக 11 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. இந்த புயலால் பலியானவர்கள் எண்ணிக்கை நேற்று முன்தினம் வரை 37 ஆக இருந்தது. இந்நிலையில், பூரி மாவட்டத்தில் புயல் பாதிப்பால் ஏற்பட்ட சம்பவத்தில் மேலும் 4 பேர் இறந்துள்ளதாக மாவட்ட கலெக்டர் உறுதி செய்துள்ளார்.

இது பற்றி இம்மாநில தகவல் மற்றும் பொதுமக்கள் தொடர்பு செயலாளர் சஞ்சய் சிங் கூறுகையில், ‘‘பானி புயலுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 41 ஆக அதிகரித்துள்ளது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் சீரமைப்பு பணிகள் நடந்து வருகின்றன. மின்விநியோகம் இல்லாத பகுதிகளில் ஜெனரேட்டர்கள் மூலமாக நீரேற்று நிலையங்கள் செயல்பட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேற்கு வங்கம், தெலங்கானா, ஆந்திர மாநிலத்தில் இருந்து ஊழியர்கள் அழைத்த வரப்பட்டு சீரமைப்பு பணிகள் துரிதப்படுத்தப்பட்டு உள்ளன. 80 சதவீத இடங்களுக்கு 10ம் தேதிக்குள் மின் விநியோகம் கிடைத்து விடும்” என்றார். 


Tags : Orissa ,storm ,Bani , Orissa, Bani storm, rose to 41, hits
× RELATED சூரிய பகவானின் தேரைக் கொண்ட சூரிய கோயில்