×

பிளஸ் 1 தேர்வில் தேர்ச்சி மாணவர்களுக்கு ஜி.கே.வாசன் வாழ்த்து

சென்னை: 11ம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 11ம் வகுப்பு பொதுத்தேர்வில் 95 சதவீத மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றிருப்பது பாராட்டுக்குரியது, வாழ்த்துக்குரியது. இதில் மாணவர்கள் 93.3 சதவீதம் பேரும், மாணவிகள் 96.5 சதவீதம் பேரும் தேர்ச்சி பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

மாணவ, மாணவிகள் படிப்பில் தனிக்கவனம் செலுத்தி, தொடர்ந்து இரவு பகல் பாராமல் நன்கு படித்து தேர்ச்சி பெற்றிருப்பது தனிச்சிறப்பு. அனைத்து பாடங்களிலும் தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு கல்வி கற்பித்த ஆசிரியர் பெருமக்களுக்கும், உறுதுணையாக இருந்த பெற்றோர்களுக்கும் பாராட்டுக்கள், வாழ்த்துக்கள். பொதுத்தேர்வில் பங்கேற்ற மாணவ, மாணவிகளில் தேர்ச்சி பெற முடியாமல் போனவர்கள் மனம் தளராமல் நன்கு படித்து தொடர்ந்து வரும் தேர்வில் பங்கேற்று தேர்ச்சி பெற வாழ்த்துகிறேன்.

குறிப்பாக தமிழகத்தில் 90.6 சதவீத அரசுப் பள்ளிகளில் படித்த மாணவர்கள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். தமிழக அரசு-அரசுப் பள்ளிகளில் படிக்கின்ற மாணவ, மாணவிகள் அனைவரும் தேர்ச்சி பெறுவதற்கு இன்னும் கூடுதல் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். தேர்ச்சி பெற்ற மாணவர்கள் தொடர்ந்து வரும் வகுப்பில் நன்கு படித்து, தேர்ச்சி பெற்று கல்வியில் சிறந்து விளங்க வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Tags : GK Vasan , Plus 1 pass, student, GK Vasan, greetings
× RELATED ஆம்னி பஸ் உரிமையாளர்களுக்கு சாலை வரியில் விலக்கு: ஜி.கே.வாசன் கோரிக்கை