×

ஐமு கூட்டணி முடிவே இறுதியானது ராகுல்காந்தி தான் பிரதமர்: ஜோதிராதித்யா கருத்து

கடந்த 2004ம் ஆண்டு மக்களவை தேர்தலுக்கு பின் காங்கிரஸ் தலைமையில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு உருவாக்கப்பட்டது. இந்த கூட்டணியின் தலைவராக சோனியா காந்தி உள்ளார்.  மன்மோகன் சிங் தலைமையில் தொடர்ந்து 10 ஆண்டுகள் இந்த கூட்டணி மத்தியில் ஆட்சி செய்தது. இதே நிலை இந்த தேர்தலிலும் இருக்கும் என அரசியல் நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். எந்த கட்சிக்கும் தனிப் பெரும்பான்மை கிடைக்காது என கூறப்படுகிறது.

இந்நிலையில், காங்கிரஸ் பொதுச்செயலாளரும் மத்திய பிரதேசத்தின் குணா-சிவபுரி மக்களவை தொகுதியில் 5வது முறையாக காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிடும் ஜோதிராதித்யா சிந்தியா நேற்று அளித்த பேட்டி: இந்த தேர்தலில் எந்த கட்சிக்கும்  தனி பெரும்பான்மை கிடைக்காது. ஆனால், நாங்கள் எத்தனை தொகுதியில் வெற்றி பெறுவோம் என அறுதியிட்டு கூற முடியாது. ஆனால், மக்கள் பாஜ.வுக்கு எதிராக வாக்களிக்கும் மனநிலையில் உள்ளனர்.

ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு மத்தியில் ஆட்சி அமைக்கும். மத்தியில் கூட்டணி ஆட்சி அமையும் என நம்புகிறேன். இதற்காக ஒத்த கருத்துடைய கட்சிகளை கூட்டணிக்கு எதிர்நோக்கி உள்ளோம். இதன் மூலம், ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு அல்லது ஐக்கிய முற்போக்கு கூட்டணி பிளஸ்... பிளஸ் அரசாக இது இருக்கும். எங்கள் பிரதமராக ராகுலை முன்னிறுத்துவோம். ஆனால், இது தொடர்பான இறுதி முடிவை ஐக்கிய முற்போக்கு கூட்டணிதான் எடுக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Jyotiraditya ,coalition ,UPFA ,Rahul Gandhi , The IUML coalition, final, Rahul Gandhi, commented on Jyotiraditya
× RELATED பாஜக ஆட்சி ஒன்றியத்தில் அமையாமல்...