×

தமிழகத்தில் பரவலாக மழை: திருத்தணியில் 109 டிகிரி வெயில்

சென்னை: தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் கடந்த 4ம் தேதி தொடங்கியது. அதற்கு பிறகு வெயிலின் தாக்கம் அதிகரிக்க தொடங்கியது. கடந்த 4  நாட்களாக வெப்ப காற்றும் வீசியது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. மேலும் பகலில் மாலை 4 மணி வரை வெளியில் வர வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்தது.
 
இந்நிலையில், தமிழகத்தில் நேற்று நிலவிய வெப்ப சலனம் காரணமாக வளி மண்டல மேல் அடுக்கில் காற்று சுழற்சி உருவாகி பல்வேறு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்தது. அதிகபட்சமாக விழுப்புரம் மாவட்டம் திருக்கோயிலூரில் 90 டிகிரி மழை பெய்தது. மதுரை, தல்லாகுளம் 50 மிமீ, தர்மபுரி, பாப்பிரெட்டி பட்டி, திருமங்கலம் 40 மிமீ, நெய்வேலி, ஒசூர் 30 மிமீ, கரூர், பாலக்கோடு, 20 மிமீ, தளி, செஞ்சி, தாளவாடி, சூளகிரி, ஸ்ரீபெரும்புதூர், போளூர் 10 மிமீ மழை பெய்துள்ளது.
 
இதுதவிர காஞ்சிபுரம் மாவட்டத்தில் நேற்று மாலையில் செங்கல்பட்டு, மதுராந்தகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்தது. சென்னை புறநகர் பகுதியிலும் சில இடங்களில் இடியுடன் மழை பெய்தது. இதனால் சாலையில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. நீண்ட நாட்களுக்கு பிறகு தமிழகத்தில் கடந்த 2 நாட்களாக பல்வேறு இடங்களில் மழை பெய்து வருவதால் வெயிலின் தாக்கம் சற்று குறைந்துள்ளது.
இந்நிலையில், திருத்தணியில் நேற்று அதிகபட்சமாக 109 டிகிரி வெயில் கொளுத்தியது.  சென்னை, வேலூர் 106 டிகிரி,  பாளையங்கோட்டை, நாகப்பட்டினம் 104 டிகிரி, பரங்கிப்பேட்டை, காரைக்கால் 102 டிகிரி, திருச்சி, புதுச்சேரி, சேலம், மதுரை ஆகிய இடங்களில் 100 டிகிரி வெயில் நிலவியது. மேலும், படிப்படியாக வெயிலின்  தாக்கம் குறையும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Tags : rainfall ,Tamil Nadu , In Tamilnadu, widespread rain,
× RELATED தமிழ்நாட்டில் இன்று ஓரிரு இடங்களில்...