×

அழகோ அழகு... தேவதை: செல்பி மோகத்தால் சரிந்த மேடை

மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள பஷிராத் மக்களவை தொகுதியில் திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளராக பிரபல வங்க மொழி நடிகை நுஷ்ரத் ஜஹான் களமிறக்கப்பட்டு உள்ளார். அவருடைய அழகை ரசிக்க, செல்லும் இடங்களில் எல்லாம மக்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது. இவர் தனது கூட்டங்களில் பாடல்களை பாடியும் மக்களை கவர்ந்து வருகிறார். இவர், தனது கட்சி வேட்பாளர் பிர்பா சோரனை ஆதரித்து பிரசாரம் செய்வதற்காக ஜார்கிராம் வந்தார்.

அப்போது, ஏராளமானோர் அங்கு திரண்டு அவருடன் செல்பி எடுத்துக் கொண்டனர். நெரிசல் அதிகமானதால், பாரம் தாங்காமல் திடீரென விழா மேடை லேசாக சரிந்தது. இதில் யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை. மேடை சரிந்ததால் திடீரென அங்கு பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக மைக்கை பிடித்த நுஷ்ரத் “யாருக்கும் காயம் ஏற்படவில்லை. அனைவரும் நன்றாக இருக்கிறார்கள்,” என்று கூட்டத்தை கட்டுப்படுத்தினார்.


Tags : Beautiful beauty, mermaid, calf, collapsed stage
× RELATED பாஜகவுக்கு அரசியல் அடியாகவும்,...