×

பிளஸ்1ல் தோல்வி அடைந்தோருக்கு ஜூனில் சிறப்பு துணைத்தேர்வு

சென்னை: பிளஸ் 1 தேர்வில் தோல்வி அடைந்தவர்கள் மற்றும் தேர்வுக்கு விண்ணப்பித்து வராமல் விட்டவர்கள் மீண்டும் தேர்வு எழுத வசதியாக சிறப்பு துணைத் தேர்வு ஜூன் மாதம் நடக்கிறது. பிளஸ் 1 தேர்வில் தோல்வி அடைந்தவர்கள், வராமல் விடுபட்டவர்கள் வசதிக்காக ஜூன் மாதம் 14ம் தேதி முதல் 21ம் தேதி வரை நடக்கிறது. அதற்கான விண்ணப்பிக்கும் தேதி பின்னர் அறிவிக்கப்படும். இந்நிலையில், பிளஸ் 1 வகுப்பை பள்ளி மாணவர்களாக படித்து தேர்வு எழுதியோர் தோல்வி அடைந்தாலும் பிளஸ் 2 வகுப்புக்கு செல்ல முடியும்.


ஆனால், பிளஸ் 2 வகுப்பு முடித்து வெளியில் வருவதற்குள் பிளஸ் 1 தேர்வையும் எழுதி முடித்தால்தான் அந்த மாணவர் முழுமையாக பிளஸ் 2 முடித்த தகுதி பெறுகிறார். அதனால் பிளஸ் 1 தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயம். அதனால் பிளஸ் 1 பாடங்கள் ஒன்றிரண்டு நிலுவையில் இருந்தாலும் பிளஸ் 2 தேர்வோடு சேர்த்து எழுத வேண்டும் அல்லது சிறப்பு துணைத் தேர்வில் எழுதி தேர்ச்சி பெற வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : subcommittee , Plus 1, failure, special accessory
× RELATED பெரியாறு அணையில் மதகுகள் இயக்கம்...