×

எலிமினேட்டர் போட்டி : ஐதராபாத் அணியை 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது டெல்லி அணி

விசாகபட்டினம்: ஐதராபாத் அணியை 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் டெல்லி அணி வீழ்த்தியது. விசாகபட்டினம் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி மைதானத்தில் நடைபெறும் இன்றைய ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டியில் டெல்லி அணிக்கு 163 ரன்களை வெற்றி இலக்காக ஐதராபாத் அணி நிர்ணயித்துள்ளது. ஐதராபாத் அணிக்கு எதிரான ஐபிஎல் எலிமினேட்டர் போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. ஐதராபாத் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்கள் இழப்பிற்கு 162 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து 163 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணி 19.5 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 163 ரன்கள் எடுத்து ஐதராபாத் அணியை வீழ்த்தியது. இந்நிலையில் மே 10ம் தேதி நடைபெறும் குவாலிஃபர் 2 வது ஆட்டத்தில் டெல்லி அணி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்கொள்கிறது.


Tags : Eliminator ,match ,team defeat ,Hyderabad ,team ,Delhi , Eliminator, Hyderabad team, 2 wickets, down, Delhi team
× RELATED தூத்துக்குடியில் நாளை முதல்...