×

எலிமினேட்டர் போட்டி: டெல்லி அணிக்கு 163 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது ஐதராபாத் அணி

விசாகபட்டினம்: டெல்லி அணிக்கு 163 ரன்களை வெற்றி இலக்காக ஐதராபாத் அணி நிர்ணயித்துள்ளது. ஐதராபாத் அணிக்கு எதிரான ஐபிஎல் எலிமினேட்டர் போட்டியில் டாஸ் வென்று டெல்லி அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரின் எலிமினேட்டர் போட்டியில் இன்று சன் ரைசர்ஸ் ஐதராபாத்-டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதுகின்றன. இப்போட்டி விசாகபட்டினம் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது. இதில் டாஸ் வென்ற டெல்லி அணி கேப்டன் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதை தொடர்ந்து களமிறங்கிய ஐதராபாத் அணி  20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 162 ரன்கள் எடுத்துள்ளது. 163 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கவுள்ளது.


Tags : Eliminator ,match ,Hyderabad ,team , Eliminator, Delhi team, Hyderabad
× RELATED முல்லாப்பூரில் இன்று மோதல்; பஞ்சாப்பை வீழ்த்த சன்ரைசர்ஸ் ஆயத்தம்