×

கன்னியாகுமரி கடற்கரை பகுதியில் உடைந்து கிடக்கும் இருக்கைகள்: அதிகாரிகள் கவனிப்பார்களா?

கன்னியாகுமரி: சர்வதேச சுற்றுலாத்தலமான கன்னியாகுமரியில் முக்கடல் சங்கமம், சூரியன் உதயம் அஸ்தமனம் பார்க்கும் வசதி, கடலுக்குள் நின்று கடல் அலையை ரசிக்கும் வகையில் வியூ டவர் மற்றும் கடல் நடுவில் விவேகானந்தர் நினைவு மண்டபம், திருவள்ளுவர் சிலை, பகவதியம்மன் கோயில் உள்ளிட்ட அம்சங்கள் உள்ளன. இதனால் இங்கு தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். ஆனால் கடற்கரையில் சுற்றுலா பயணிகள் அமர்வதற்கோ, குளித்துவிட்டு உடை மாற்றவோ, ஓய்வு எடுப்பதற்கோ போதுமான வசதிகள் இல்லை. கடற்கரை மற்றும் சாலையோரங்களில் கடைகள், தற்காலிக கடைகள் நடத்த அறநிலையத்துறை அனுமதி அளித்துள்ளது. இதனால் நெருக்கடி ஏற்பட்டு வரும் நிலையில், இருக்கும் இடத்தையும் ஆக்ரமிப்பாளர்கள் ஆக்ரமித்து கடைகள் வைத்துள்ளனர். இதனால் கடும் நெருக்கடி ஏற்பட்டு சுற்றுலா பயணிகள் கடும் அவதியடைகின்றனர்.

கடற்கரையில் விபத்து அல்லது விபரீத சம்பவங்கள் நடந்தால் ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனம், போலீஸ் வாகனம் போன்ற அவசர கால வாகனங்கள் ெசல்வதற்கு வசதியாக கடற்கரை வரை சாலை அமைக்கப்பட்டது. ஆனால் ஆக்ரமிப்பாளர்கள் இந்த சாலையையும் ஆக்ரமித்து கடை வைத்துள்ளனர். இதை அதிகாரிகள் கண்டும் காணாமல் உள்ளனர்.  இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சுற்றுலா பயணிகளின் வசதிக்காக கடற்கரையில் இருக்கைகள் அமைக்கப்பட்டன. கிரானைட் கற்களால் அமைக்கப்பட்ட இந்த இருக்கைகளை மர்ம ஆசாமிகள் அடித்து நொறுக்கினர். பின்னர் அந்த கிரானைட் கற்களும் மாயமாகி விட்டன. இதனால் சுற்றுலா பயணிகள் அமர்வதற்கு எந்த வசதியும் இல்லாமல் உள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் ஆங்காங்கே தடுப்பு சுவர்களிலும், கடற்கரையில் கொட்டப்பட்டுள்ள கற்களிலும் அமரும் நிலை ஏற்படுகிறது.

இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. குறிப்பாக இருக்கைகளை அடித்து நொறுக்கிய குண்டர்கள் மீதும், கிரானைட் கற்களை திருடிய திருடர்கள் மீதும் புகார் அளிக்கவோ, மேல் நடவடிக்கை எடுக்கவோ அதிகாரிகள் முயற்சி எடுக்கவில்லை. இது சுற்றுலா பயணிகளுக்கு மேலும் அச்சத்தை  ஏற்படுத்தி உள்ளது. கன்னியாகுமரியில் நிலவும் பாதுகாப்பற்ற நிலை மற்றும் சுகாதாரக்கேட்டால் வடமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் மறுமுறை இங்கு வர விரும்புவதில்லை. இது கன்னியாகுமரியின் சுற்றுலாத்தலம் என்ற நற்பெயரை அடியோடு அழிந்துவிடும் நிலைக்கு கொண்டு செல்கிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கன்னியாகுமரியில் நடக்கும் அத்துமீறல்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். கடற்கரையில் புதியதாக இருக்கைகள் அமைக்க வேண்டும். ஏற்கனவே இருந்த இருக்கைகளை உடைத்தவர்கள் மீதும், கிரானைட் கற்களை திருடியவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். கடற்கரையில் வெயிலுக்கு ஒதுக்கவும், ஓய்வு எடுக்கவும் இடம் அமைக்க வேண்டும் என சுற்றுலா பயணிகள் ேகாரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : beach ,Kanyakumari , Kanyakumari Beach, Seats
× RELATED தூத்துக்குடி கடற்கரையில் இருந்து...