×

சென்னையில் சட்டவிரோதமாக கடத்திவரப்பட்ட ரூ.2 கோடி மதிப்பு தங்கம், சங்குகள், செம்மரக்கட்டைகள் பறிமுதல்

சென்னை: சென்னையில் இதுவரை செம்மரக்கடத்தல், தங்கம் கடத்தல் போன்ற சம்பவங்களில் ஈடுப்பட 9 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். சென்னை துறைமுகத்தில் துணிகளில் மறைத்து கடத்த முயன்ற 14 டன் செம்மரக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இது தொடர்பாக காவல்துறை அதிகாரிகள் கூறியதாவது, கடந்த ஏப்.,29ம் தேதி சென்னை மற்றும் கிருஷ்ணாபட்டினம் துறைமுகங்களில் இரண்டு கன்டெய்னர்களில் கடத்தி வரப்பட்ட 14 மெட்ரிக் டன் செம்மரக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக லாரி ஓட்டுனர்களை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர். அதேபோல, சட்டவிரோதமாக கடத்தி வரப்பட்ட ரூ.4.5 கோடி மதிப்பு வெளிநாட்டு சிகரெட்களும் பறிமுதல் செய்யப்பட்டது. நேற்றையதினம், சென்னையிலிருந்து விமானம் மூலம் சிங்கப்பூர் செல்லவிருந்த 6 பேரின் உடைமைகள் சோதனை செய்யப்பட்டது.

அப்போது 180 கிலோ எடை கொண்ட 352 பெரிய சங்கு மற்றும் சிப்பிகள் பறிமுதல் செய்யப்பட்டன. விசாரணையில் இவற்றை மன்னார் வளைகுடா பகுதியிலிருந்து எடுத்ததாக கடத்தலில் ஈடுபட்டவர்கள் வாக்குமூலம் கொடுத்துள்ளனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து, சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில், இரண்டு பேரிடமிருந்து 7.968 கிலோ எடை கொண்ட தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இவற்றின் மதிப்பு ரூ.2.61 கோடி என தெரியவந்துள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட தங்கம் அசாமிலிருந்து ரயில் மூலம் கடத்தி வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதுவரை, 4 கடத்தல் சம்பவங்களில் ஈடுபட்ட 9 பேரை கைது செய்து வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : transfers ,Chennai , Gold, sirens, cemmarakkattaikal, kidnapping, seizure
× RELATED முந்தைய 9 ஆண்டுகளை விட பாஜ ஆட்சியில்...