×

செறிவூட்டப்பட்ட யுரேனிய உற்பத்தியை தொடங்குவோம் : அமெரிக்காவுக்கு ஈரான் எச்சரிக்கை

தெஹ்ரான் : 2015ம் ஆண்டு சர்வதேச நாடுகளுடன் ஏற்பட்ட அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து முக்கிய உறுதிமொழிகளில் இருந்து பின் வாங்குவதாக ஈரான் அறிவித்துள்ளது. ஈரானின் அணுஆயுத செயல்பாடுகளை கட்டுப்படுத்தும் நோக்கில் 2015ம் ஆண்டு அமெரிக்கா உள்ளிட்ட 6 நாடுகள் ஈரானுடன் அணு சக்தி ஒப்பந்தம் மேற்கொண்டன. இந்த பன்னாட்டு ஒப்பந்தத்தில் இருந்து கடந்த ஆண்டு அமெரிக்கா திடீரென விலகியது, ஈரான் மீது தடைகளையும் விதித்து வருகிறது.

இந்த சூழலில் அணு சக்தி ஒப்பந்தத்தில் இருந்த முக்கிய உறுதி மொழிகளில் இருந்து பின் வாங்குவதாக ஈரான் அறிவித்துள்ளது. செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை ஈரானிலேயே சேர்த்து வைப்போம் என அதிபர் ரெளஹானி கூறியுள்ளார். இன்னும் 60 நாட்களில் செறிவூட்டப்பட்ட யுரேனிய உற்பத்தியை தொடங்குவோம் என்றும் ஈரான் அதிபர் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஈரானின் இந்த அறிவிப்பு சர்வதேச நாடுகள் இடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.

Tags : America ,Iran , Nuclear, contract, Iran, enriched, uranium, chancellor, rahani
× RELATED நள்ளிரவில் 300 ஏவுகணை, டிரோன்களை ஏவி...