நமிபியாவில் பருவமழை பொய்த்ததால் கடும் பஞ்சம்.. அவசர நிலை சட்டம் அமல்

வின்ஹோயெக்: தென்மேற்கு ஆப்பிரிக்க நாடான நமிபியாவில் கடும் பஞ்சம் காரணமாக அவசர காலச் சட்டம் அமுல் படுத்தப் பட்டுள்ளது. நமிபியா நாட்டில் சுமார் 25 லட்சம் மக்கள் வாழ்கின்றனர். இந்த நாடு தனிநபர் பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய நாடாக உள்ளது. நமிபியாவில் பருவமழை பொய்த்துப் போகும் காலங்களில் கடுமையான பஞ்சம் மற்றும் பசி, பட்டினியால் மக்கள் திண்டாடுவது தவிர்க்க முடியாத வாழ்வியல் சூழலாக உள்ளது. இதனால் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக கூறப்படுகிறது.

ஏராளமான கால்நடைகளும் ஆங்காங்கே செத்து மடிந்துள்ளன. கடந்த 6 மாதங்களில் மட்டும் 60000க்கும் மேற்பட்ட வீட்டு வளர்ப்பு பிராணிகள் உயிரிழந்துள்ளன. இதனால் மக்களுக்கு நோய் பரவும் ஆபத்தும் ஏற்பட்டுள்ளது. இது குறித்து நமிபியா பிரதமர் சாரா குகொங்கெல்வா கூறுகையில்; பஞ்சத்தால் பாதிக்கப்பட்டுள்ள நமிபியாவுக்கு உலக நாடுகள்  உதவ வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். போதுமான அளவு பருவமழை பெய்யாததே வறட்சிக்கு காரணம் என்று கூறியுள்ளார்.

போதிய அளவில் பருவமழை பெய்யாததால் மக்களுக்கு தேவையான நிவாரணப் பணிகளை மேற்கொள்வதற்காக அவசரநிலை சட்டத்தை அந்நாட்டின் அதிபர் ஹகே ஜிய்ன்கோப் பிரகடனப்படுத்தியுள்ளார். நாடு முழுவதும் கால்நடைகள் மற்றும் வளர்ப்பு பிராணிகள் தொடர்பாக விரிவான கணக்கெடுப்பு நடத்துமாறு அரசு அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

Related Stories: