×

தமிழக கோவில்களில் இரவு காவலர் பணியிடங்களை நிரப்ப கோரிய வழக்கு : இந்து அறநிலையத்துறை ஆணையர் ஆஜராக உத்தரவு

மதுரை : தமிழகத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும் காலியாக உள்ள இரவு காவலாளி பணியிடங்களை நிரப்பி உரிய ஊதியம் நிர்ணயம் செய்யக் கோரிய வழக்கில் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் ஆஜராக உத்தரவு


தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனுவில், தேனி மாவட்டத்தில் கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்து தொடர்ச்சியாக திருட்டு சம்பவங்கள் நடைபெற்று வருவதாக குறிப்பிட்டார். மேலும் மே3ம் தேதி தேனி ராயப்பன்பட்டியில் உள்ள பூதநாராயணர் கோவிலில் புகுந்த கொள்ளையர்கள் 70வயது முதியவர் மலையன் என்பவரை கொன்றதாக குறிப்பிட்ட அவர், கொள்ளைகளை தடுக்க காவல்துறையும் நடவடிக்கை எடுப்பதில்லை எனத் தெரிவித்தார்.

 எனவே இது போன்ற கொள்ளை  சம்பவங்களை தடுக்கும் விதமாக தமிழகத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும் காலியாக உள்ள இரவு காவலர் பணியிடங்களை நிரப்பி அவர்களுக்கு முறையான ஊதியத்தை நிர்ணயம் செய்ய உத்தரவிட வேண்டும் எனக் கூறி இருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஜி.ஆர். சுவாமிநாதன், தண்டபாணி ஆகியோர் அடங்கிய அமர்வு இது குறித்து உரிய பதில் அளிக்க இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் ஆஜராக உத்தரவிட்டு வழக்கை ஜூன் முதல் வாரத்திற்கு ஒத்திவைத்தார்.


Tags : court ,temples ,Tamilnadu , Hindu Religious, Charity, Commissioner, Night Guardian, Police
× RELATED பெரம்பலூரில் பெருமாள், சிவன் கோயில்கள் உண்டியல் திறப்பு