×

நாக் அவுட் சுற்றில் முதல் வெற்றியை ருசிக்குமா டெல்லி?...... ஐதராபாத்துடன் இன்று பலப்பரீட்சை

விசாகப்பட்டினம்: ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் விசாகப்பட்டினத்தில் இன்று நடைபெறும் நாக் அவுட் சுற்று ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ்-சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதுகின்றன. டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி லீக் சுற்றில் 9 வெற்றி, 5 தோல்வியுடன் 18 புள்ளிகளுடன் 3-வது இடத்தை பிடித்து 7 ஆண்டுகளுக்கு பிறகு ‘பிளே-ஆப்’ சுற்றுக்கு தகுதி பெற்றது. இதேபோல் 2016-ம் ஆண்டு சாம்பியனான சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணி லீக் சுற்றில் 6 வெற்றி, 8 தோல்வியுடன் 12 புள்ளிகள் பெற்றது. 4-வது இடத்துக்கான போட்டியில் ஐதராபாத், கொல்கத்தா, பஞ்சாப் அணிகள் ஒரே புள்ளியுடன் சமநிலை வகித்த போதிலும் ‘ரன்-ரேட்’ அடிப்படையில் ஐதராபாத் அணி 4-வது இடம் பிடித்து ‘பிளே-ஆப்’ சுற்றுக்குள் நுழைந்தது.

டெல்லி அணி இதுவரை 2 முறை பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியுள்ளது. அந்த 2 முறையும் தோல்வியடைந்துள்ளது. இதனால் இம்முறை வெற்றி பெற்று குவாலிபயர் 2 போட்டிக்கு தகுதி பெறும் முனைப்பில் டெல்லி அணி வீரர்கள் உள்ளனர். டெல்லி அணி கடந்தாண்டு வரை டெல்லி டேர்டெவில்ஸ் என்ற பெயரில் விளையாடி வந்தது. இந்தாண்டு அணியின் பெயர் டெல்லி கேப்பிடல்ஸ் என மாற்றப்பட்டது. டெல்லி அணி ஒருமுறைகூட ஐபிஎல் கோப்பையை வென்றதில்லை. இம்முறை துவக்கத்தில் சிறப்பாக விளையாடினாலும், கடைசியாக விளையாடிய லீக் போட்டிகளில் அந்த அணி தோல்வியை தழுவியது.

அந்த அணிக்கு பலமாக விளங்கிய வேகப்பந்துவீச்சாளர் ரபடா காயம் காரணமாக விலகியது பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது. இருப்பினும் பிருத்வி ஷா, ஷ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பண்ட் போன்ற இளம் வீரர்களின் சிறப்பான பேட்டிங், மற்றும் ரிக்கி பாண்டிங், சவுரவ் கங்குலி போன்ற ஜாம்பவான்கள் பயிற்சியாளர்களாக இருப்பது அந்த அணிக்கு மேலும் வலுவூட்டுகிறது. ஏற்கனவே மும்பை அணி பைனலுக்கு முன்னேறியுள்ள நிலையில், இந்த போட்டியில் வெற்றிபெறும் அணி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் குவாலிபயர் 2 போட்டியில் விளையாடும். லீக் சுற்றில் சென்னையுடன் விளையாடிய 2 போட்டிகளிலும் டெல்லி அணி தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Delhi ,Hyderabad , Knock Out Round, Delhi Capitals, Sun Risers, Hyderabad, IPL,
× RELATED அமலாக்கத்துறை காவல் சட்ட விரோதம் கெஜ்ரிவால் உயர் நீதிமன்றத்தில் மனு