×

காயம் காரணமாக உலகக்கோப்பை தொடரிலிருந்து விலகிய ஆஸ்திரேலிய வேகப்பந்துவீச்சாளர்

சிட்னி: தோள்பட்டையில் ஏற்பட்ட காயம் காரணமாக ஆஸ்திரேலிய வேகப்பந்துவீச்சாளர் ஜய் ரிச்சர்ட்சன் உலகக்கோப்பை தொடரிலிருந்து விலகியுள்ளார். 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் வருகிற மே 30-ம் தேதி இங்கிலாந்தில் தொடங்குகிறது. இதற்காக பல்வேறு அணி வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக ஆஸ்திரேலிய அணி மே முதல் வாரத்தில் இருந்து பயிற்சியை தொடங்கியது. நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலிய அணி கடந்தாண்டு நடைபெற்ற ஒருநாள் தொடர்களில் தொடர் தோல்வியை சந்தித்து வந்தது. காரணம் அந்த அணியின் நட்சத்திர வீரர்கள் ஸ்டீவன் ஸ்மித், வார்னர் ஆகியோர் பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் சிக்கி ஓராண்டு விளையாட தடை விதிக்கப்பட்டனர்.

அவர்களது இடத்தை நிரப்ப முடியாமல் திணறிய ஆஸ்திரேலிய அணி கடந்தாண்டு தொடர் தோல்விகளை சந்தித்து வந்தது. இருப்பினும் இந்தாண்டு தொடக்கத்தில் நடைபெற்ற இந்தியாவிற்கு எதிரான தொடரையும், பாகிஸ்தானுக்கு எதிரான தொடரையும் கைப்பற்றி தொடர் தோல்விகளுக்கு விடைதேடியது ஆஸி., மேலும் ஸ்மித், வார்னருக்கு விதிக்கப்பட்ட ஓராண்டு தடை ஏப்ரல் மாதத்துடன் முடிந்தது. இதையடுத்து அவர்கள் இருவரும் உலகக்கோப்பை தொடருக்கான அணியில் சேர்க்கப்பட்டனர்.

தற்போது நடைபெற்றுவரும் ஐபிஎல் தொடரில் வார்னர் 692 குவித்து முதலிடத்தில் உள்ளார். தற்போது உலகக்கோப்பைக்காக ஆஸ்திரேலிய அணி வீரர்கள் தயாராகி வருகின்றனர். இதில் வார்னர், ஸ்மித் பங்கேற்றுள்ளனர். இந்நிலையில் நேற்று பயிற்சியின் போது ஆஸ்திரேலியாவின் இளம் வேகப்பந்துவீச்சாளர் ஜய் ரிச்சர்ட்சன் தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது.  இதன்காரணமாக அவர் உலக கோப்பைக்கான அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக கேன் ரிச்சர்ட்சன் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : bowler ,Australian ,World Cup , Jhye Richardson, World Cup
× RELATED டி20 உலகக்கோப்பை 2024: தான் தேர்வு செய்த...