×

பெண் போலீஸ், எஸ்ஐ.,யை மிரட்டிய மக்கள் நீதி மய்ய பொறுப்பாளர்: வேடிக்கை பார்த்த இன்ஸ்பெக்டர்

ஈரோடு: ஈரோட்டில் போக்குவரத்திற்கு இடையூறாக நிறுத்தப்பட்டிருந்த வாகனத்தை அப்புறப்படுத்த உத்தரவிட்ட போக்குவரத்து பெண் போலீசுக்கும், இதைத்தட்டி கேட்ட எஸ்ஐ.க்கும் மக்கள் நீதி மய்யத்தின் பொறுப்பாளர் ராஜேஷ் என்பவர் மிரட்டல் விடுத்தார். இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்காமல் விசாரிக்க வந்த இன்ஸ்பெக்டர் பன்னீர்செல்வம் வேடிக்கை பார்த்துவிட்டு 10 நிமிடத்தில் சென்றுவிட்டார். ஈரோடு மேட்டூர் ரோட்டில் பரிமளம் காம்ப்ளக்ஸ் பகுதியில் போக்குவரத்து பெண் போலீஸ் கோமதி என்பவர் போக்குவரத்து சீரமைக்கும் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, அங்குள்ள பழக்கடை முன்பு ஒரு கார், மொபட் மீது மோதியது. இதனால் வாகனத்தில் வந்தவர்கள் ஒருவருக்கொருவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதைத்தொடர்ந்து அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதை பார்த்த கோமதி அங்கு வந்து போக்குவரத்தை சரி செய்தார். இருசக்கர வாகனத்தில் வந்தவர் இதே பகுதியில் பழக்கடை நடத்தி வருபவரும், மக்கள் நீதி மய்யத்தின் பொறுப்பாளருமான ஆனந்தம் ராஜேஷ் தனது கடை முன்பு வாகனத்தை நிறுத்தினார். இதைப்பார்த்த பெண் போலீஸ் கோமதி எதற்காக போக்குவரத்திற்கு இடையூறாக வாகனத்தை நிறுத்தி உள்ளீர்கள் என கேட்டார். அப்போது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து அந்த பகுதி வழியாக ஈரோடு தலைமை மருத்துவமனை போலீஸ் ஸ்டேஷனில் பணியாற்றி வரும் எஸ்ஐ.,ரவி வந்தார். அங்கு பெண் போலீசாருடன் வாக்குவாதம் செய்வதை பார்த்து தனது வாகனத்தை நிறுத்தி விசாரித்தார். அப்போது பெண் போலீஸ் கோமதி, ராஜேஷ் தன்னை அவதூறாக பேசியதாக தெரிவித்தார். இதனால் எஸ்ஐ., ரவி இதை தட்டிக் கேட்டார்.

இதனால், அவருக்கும், ராஜேசுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஒருகட்டத்தில் ராஜேஷ், எஸ்.ஐ.யை ஒருமையில் பேசியதுடன் சீருடையை கழட்டி வைத்து விட்டு வா. யார் பெரியவர்கள் என்று பார்த்து விடுவோம் என சாவல் விட்டார். இதுகுறித்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போக்குவரத்து போலீசார் எஸ்.பி.,சக்திகணேசனுக்கு தகவல் அளித்தனர். அவரது உத்தரவின்பேரில் ஈரோடு டவுன் இன்ஸ்பெக்டர் பன்னீர்செல்வம் சம்பந்தப்பட்ட பழக்கடைக்கு வந்தார். பின்னர் வெளியே சிறிது நேரம் நின்று கொண்டிருந்தார். நடந்த சம்பவம் குறித்து யாரிடமும் எந்த விசாரணையும் செய்யாமல் கடையின் வாசல்வரை வந்து 10 நிமிடத்தில் அங்கிருந்து புறப்பட்டு சென்றார். இதனால் அங்கிருந்த போலீசார் அதிருப்தியடைந்தனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Woman Police ,inspector , Erode, MNM, inspector
× RELATED காவலர்கள், அரசு அலுவலர்கள் அஞ்சல் வாக்குப்பதிவு: அதிகாரிகள் ஆய்வு