×

ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதியை நிறுத்தி கொள்ள இந்தியாவுக்கு ஜூன் மாதம் வரை கால அவகாசம் : அமெரிக்கா முடிவு

வாஷிங்டன் : ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் கொள்முதலை இந்தியா நிறுத்தி கொள்ள ஜூன் மாதம் வரை அமெரிக்கா கால அவகாசம் அளிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. கடந்த ஆண்டு ஈரானுடனான அணு சக்தி ஒப்பந்தத்தில் இருந்து விலகிய அமெரிக்கா, அந்த நாட்டின் மீது பொருளாதாரத் தடையை மீண்டும் விதித்துள்ளது. அத்துடன் அந்த நாட்டுடன் வர்த்தக உறவு வைத்துள்ள சீனா, இந்தியா, உள்ளிட்ட 5 நாடுகளை எச்சரித்து வருகிறது. கச்சா எண்ணெய் இறக்குமதியில் 2ம் இடத்தில் உள்ள இந்தியாவும் உடனடியாக இறக்குமதியை நிறுத்த வேண்டும் என்று அமெரிக்கா அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவுறுத்தி இருந்தார்.

எண்ணெய் கொள்முதலை நிறுத்தவில்லை என்றால் இந்தியா மீது பொருளாதாரத் தடை விதிக்கப்படும் என்றும் இந்தியாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை விடுத்து வருகிறது. மே 2ம் தேதியுடன் கால அவகாசம் முடிந்த நிலையில், இந்திய பொருளாதார நிலை மற்றும் பொதுத் தேர்தலை கருத்தில் கொண்டு தங்களுக்கு மேலும் அவகாசம் தேவை என்று அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மைக் பொம்பியோவிடம் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் கடந்த வாரம் வேண்டுகோள் விடுத்திருந்தார். இதனால் புதிய அரசு அமையும் வரை பொருளாதாரத் தடை நடவடிக்கைகளை நிறுத்தி வைக்க அமெரிக்கா முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : India ,Iran , Iran, crude oil, timeframe, India, import, Donald Trump
× RELATED இஸ்ரேலுக்கான விமான சேவை தற்காலிகமாக...