×

நார்வேயில் தண்ணீரில் விழுந்த செல்போனை மீட்டெடுத்த திமிங்கலம்

ஒஸ்லோ: நார்வேயில் தண்ணீரில் விழுந்த செல்போனை மீட்டெடுத்த திமிங்கலத்தின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. நார்வேயில் கடந்த வாரம் சந்தேகத்திற்குரிய வகையில் திமிங்கலம் ஒன்று பிடிப்பட்டது. அந்த திமிங்கலமானது உளவு பார்க்கும் விதமாக ரஷ்யாவால் அனுப்பப்பட்டிருக்கலாம் என பலரால் கூறப்பட்டது. இதனை தொடர்ந்து பல்வேறு விமர்சனங்களும் எழுந்தது. இதனை தொடர்ந்து அதிகாரிகள் அது குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் பெலுக்கா இனத்தைச் சேர்ந்த திமிங்கலம் ஒன்று தண்ணீருக்குள் விழுந்த செல்போன் ஒன்றை தனது வாயால் பிடித்து அங்கிருந்தவர்களிடம் மீட்டு கொடுத்தது. இந்த வீடியோ பலரை கவர்ந்தது. இதனை தொடர்ந்து இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பலரால் பகிரப்பட்டது. இருப்பினும் இரு சம்பவங்களில் தொடர்புடைய திமிங்கலமும் ஒன்று தான் என சிலரால் கூறப்படுகிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Norway , Norway, water, cell phone, whale
× RELATED நார்வே திரைப்பட விழாவுக்கு தமிழ் படங்கள் தேர்வு