×

சேலம் ஏற்காட்டில் பயங்கரம் காட்டுப்பகுதியில் 2 பேர் அடித்துக்கொலை: போதை ஆசாமிகள் வெறிச்செயல்

சேலம்: சேலம் ஏற்காட்டில் காட்டுப்பகுதிக்கு மாடு மேய்க்க சென்ற முதியவரும், விறகு பொறுக்கச் சென்ற மூதாட்டியும் கல்லால் அடித்துக் கொலை செய்யப்பட்டனர். சேலம் மாவட்டம் ஏற்காடு குண்டூர் தெப்பக்காடு பகுதியை சேர்ந்தவர் பெரியகவுண்டர் மகன் பெரியான்(60). இவர், அருகில் உள்ள காட்டுப்பகுதிக்கு  மாடுகளை ஓட்டிச்சென்றார். மாலை 5 மணியளவில் மாடுகள் மட்டும் வீட்டிற்கு வந்தது. பெரியான், வீடு திரும்பாதை கண்டு சந்தேகமடைந்த அவரது மகன் கிருஷ்ணமூர்த்தி மற்றும் உறவினர்கள் காட்டுப்பகுதிக்கு தேடி சென்றனர். அப்போது, காட்டிற்குள் பெரியான், கல்லால் தலையில் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுக் கிடந்தார்.

 அங்கிருந்து சுமார் 100 அடி தொலைவில் குண்டூர் தெப்பக்காட்டைச் சேர்ந்த சின்னையன் மனைவி கரியம்மாள் (63) என்பவரும் கல்லால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுக் கிடந்தார். தகவலறிந்த ஏற்காடு போலீசார் சம்பவ இடம் வந்து விசாரித்தனர். இதில், குண்டூரை சேர்ந்த சரவணன் என்பவருக்கு இந்த இரட்டைக் கொலையில் தொடர்பிருப்பது தெரியவந்துள்ளது. நேற்று பிற்பகலில் அந்த காட்டுப்பகுதியில் சரவணன் மது குடித்துக் கொண்டிருந்துள்ளார். அப்போது, பெரியானுடன் திடீரென தகராறு ஏற்பட்டுள்ளது. அதில், அவரை கல்லால் அடித்துள்ளார். அப்போது அந்த பகுதியில் விறகு பொறுக்கிக் கொண்டிருந்த கரியம்மாள் வந்து தட்டிக் கேட்டுள்ளார். அவரையும் கல்லால் தாக்கி கொன்றது தெரியவந்துள்ளது.தலைமறைவான சரவணனை தேடி வருகின்றனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Salem Yercaud Terror Attacks , Salem, Yercaud, beaten, wolves
× RELATED சென்னை மாநகரப் பகுதியில் இன்று 565...