×

9.83 கோடி கடன் வாங்கி மோசடி வங்கி மேலாளர் உட்பட 60 பேர் கோர்ட்டில் ஆஜர்: 5 ஆயிரம் பக்க குற்றப்பத்திரிகை

கோவை: திருப்பூர் அருகே பொதுத்துறை வங்கியில் முறைகேடாக ₹9.83 கோடி கடன் பெற்று மோசடி செய்த வழக்கில் வங்கி மேலாளர் உட்பட 60 பேர் கோவை கோர்ட்டில் நேற்று ஆஜராகினர்.திருப்பூர் மாவட்டம், சாமளாபுரம் பகுதியில் உள்ள கனரா வங்கியில் கடந்த 2013-2016 ஆண்டுகளில் வங்கி மேலாளராக பணியாற்றியவர் ராமச்சந்திரன்.இந்த வங்கியில் 2013ம் ஆண்டு முதல் 2016 வரை 60க்கும் மேற்பட்டோர் மேலாளர் ராமச்சந்திரன் உதவியோடு விசைத்தறி வாங்குவதாக கூறி, ₹ 9.83 கோடி கடன் பெற்றுள்ளனர். ஆனால் கடன் பெற்ற தொகையை விசைத்தறி வாங்காமல் வேறு தேவைக்காக பயன்படுத்தியது ஆய்வில் தெரியவந்தது. இதையடுத்து வங்கி நிர்வாகம் சிபிஐ யில் புகார் அளித்தது.

இதன்படி கடந்த 2017ம் ஆண்டு வங்கி மேலாளர் உட்பட 60 பேர் மீது சிபிஐ வழக்குபதிவு செய்தது. இவ்வழக்கு கோவை சிபிஐ நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. சிபிஐ தரப்பில் வங்கி மேலாளர் உட்பட 60 பேர் குற்றவாளிகள் என  குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து 60 பேரும் ஆஜராக சிபிஐ நீதிமன்றம் சம்மன் அனுப்பியது. இதையடுத்து இவ்வழக்கு நீதிபதி குணசேகரன் முன்னிலையில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது குற்றம்சாட்டப்பட்ட 60 பேரும் ஆஜாராகினர். தொடர்ந்து அவர்களுக்கு வழக்கு சம்பந்தமாக 5 ஆயிரம் பக்க குற்றப்பத்திரிகை நகல் வழங்கப்பட்டது. இதையடுத்து வழக்கு விசாரணையை வரும் 27ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : firms ,fraudulent bank manager , 9.83 crore, borrowed ,fraud,chargesheet
× RELATED ரூ3,000 கோடி முதலீடு, 50,000 பேருக்கு...