×

திருச்செந்தூர் கோயிலில் கர்நாடக முதல்வர் தரிசனம்

திருச்செந்தூர்: முன்னாள் பிரதமர் தேவகவுடா மற்றும் அவரது மகனும் கர்நாடக  முதல்வருமான குமாரசாமி ஆகியோர் நேற்று கர்நாடகாவில் இருந்து தூத்துக்குடிக்கு  தனி விமானத்தில் வந்தனர். தொடர்ந்து அங்கிருந்து கார் மூலம் காலை 11.30  மணிக்கு திருச்செந்தூருக்கு வந்தனர். சுப்பிரமணியசுவாமி  கோயிலுக்கு தரிசனம் செய்ய வந்த அவர்களுக்கு சண்முக விலாச  மண்டபத்தில் திருக்கோயில் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.  பின்னர் கோயிலில் மூலவர், சண்முகர், தட்சிணாமூர்த்தி, சத்ரு சம்ஹார  மூர்த்தி உள்ளிட்ட சன்னதிகளில் தரிசனம் செய்தனர்.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Karnataka ,Chief Minister ,Tiruchengore , Thiruchendur, temple, Karnataka, Chief Minister ,Darshan
× RELATED கர்நாடக அரசை கவிழ்க்க கேரள கோயிலில்...