×

தலைவிரித்தாடும் பஞ்சத்தை போக்க சென்னை நகரில் 15 நாளுக்கு ஒரு முறை குடிநீர் வினியோகம் செய்ய திட்டம்?

* மாவட்டங்களில் 7 நாளுக்கு ஒரு முறை
* 2 மாத பிரச்னையை சமாளிக்க வழி
* அரசிடம் பொதுப்பணித்துறை அறிக்கை?

சென்னை: குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் தமிழகத்தின் தேவை என்ன? என்பது குறித்து பொதுப்பணித்துறை தமிழக அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்துள்ளது. அதில் சென்னையில் 15 நாளுக்கு ஒருமுறையும் தமிழக மாவட்டங்களில்  7 நாளுக்கு ஒருமுறையும் குடிநீர் விநியோகித்தால் தண்ணீர் பஞ்சம் வராது என்று கூறப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்தாண்டு வடகிழக்கு பருவமழை சராசரி அளவை காட்டிலும் குறைவாக பெய்தது. இதனால், தமிழகத்தில் 89 அணைகள், 14,098 ஏரிகளின் நீர்மட்டம் உயரவில்லை. குறிப்பாக, குடிநீர் மற்றும் பாசனத்திற்கு முக்கிய ஆதாரமாக விளங்கும் 198  டிஎம்சி கொள்ளளவு கொண்ட 15 முக்கிய அணைகளில் நீர்மட்டம் 31 டிஎம்சி மட்டுமே உள்ளது. அதேபோன்று, சென்னையில் 11 டிஎம்சி கொள்ளளவு கொண்ட 4 ஏரிகளில் 274 மில்லியன் கன அடி (0.2 டிஎம்சி) மட்டுமே நீர் இருப்பு உள்ளது. இந்த ஏரிகள் மற்றும் அணைகளின் நீர்மட்டத்தை வைத்து வரும் மே மற்றும் ஜூன் மாதம் வரை குடிநீர் விநியோகம் செய்வது என்பது கேள்விக்குறியாக உள்ளது. எனவே, அணை, ஏரிகளில் நீர் இருப்பை கொண்டு 2 மாதங்களுக்கு குடிநீர்  விநியோகம் செய்ய முடியுமா, குடிநீர் விநியோகம் செய்ய மாற்று ஏற்பாடுகள் என்ன செய்யலாம் என்பது குறித்து ‘வாட்டர் டிராப்ட்’ என்ற பெயரில் விரிவான அறிக்கை தயாரிக்க தமிழக அரசு பொதுப்பணித்துறைக்கு உத்தரவிட்டது. அதன்படி,  சென்னை மற்றும் தமிழகத்தின் பிற நீர்நிலை ஆதாரங்களை அடிப்படையாக வைத்து அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கையை தமிழக பொதுப்பணித்துறை அரசுக்கு தாக்கல் செய்துள்ளது.

‘‘இது குறித்து பொதுப்பணித்துபகுதிகளிலும் தண்ணீர் பஞ்சம் ஏற்படாறை அதிகாரிகள் கூறியதாவது: வாட்டர் டிராப்ட் அறிக்கையில் சென்னையில் 3 முதல் 6 நாளுக்கு ஒரு முறை தண்ணீர் வழங்கினால் மே மாதம் வரை வழங்க வாய்ப்பு  இருக்கிறது. அதுவே 15 நாளைக்கு ஒருமுறை தண்ணீர் வழங்கினால் ஜூன் மாதம் வரை சென்னைக்கு தண்ணீர் பஞ்சம் வராது. அதற்குள் ெதன்மேற்கு பருவமழை வந்துவிடும். தமிழகத்தின் மற்ற மாவட்டங்களில் சில இடங்களில் 3  நாளைக்கு ஒரு முறையும் சில இடங்களில் 10 நாளைக்கு ஒரு முறையும் சில இடங்களில் 5 நாளுக்கு ஒரு முறையும் தண்ணீர் விடப்படுகிறது. இதை ஒரே சீராக 7 நாட்களுக்கு ஒருமுறை என்று மாற்றினால் ஜூன் மாதம் வரை தமிழகத்தின்  எந்த து என்று கூறினார். வாட்டர் டிராப்ட் அறிக்கையில் சென்னையில் 3 முதல் 6 நாளுக்கு ஒரு முறை தண்ணீர் வழங்கினால் மே மாதம் வரை வழங்க வாய்ப்பு இருக்கிறது. அதுவே 15 நாளைக்கு ஒருமுறை தண்ணீர் வழங்கினால் ஜூன் மாதம் வரை சென்னைக்கு  தண்ணீர் பஞ்சம் வராது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Madras , famine,Chennai , Planning ,supply ,drinking ,water?
× RELATED தேர்தல் விளம்பரங்களுக்கு முன் அனுமதி...