×

அறுவை சிகிச்சை மூலம் பிரசவம் பார்ப்பதில் கர்நாடக அரசு மருத்துவமனைகள் முதலிடம்

பெங்களூரு:  சுகப்பிரசவத்தைக் காட்டிலும் அறுவை சிகிச்சை மூலம் பிரசவம் பார்ப்பதில் கர்நாடக மாநில அரசு மருத்துவமனைகள் முதலிடம் வகிக்கிறது. அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பெற்றுக்கொள்ளும் முறையை முதலில் தனியார் மருத்துவமனைகள்தான் பின்பற்றி வந்தன. காலப்போக்கில் அரசு மருத்துவமனைகளும் அதனை பின்பற்ற ஆரம்பித்துவிட்டன.

சுகப்பிரசவத்துக்கு ஏற்ற சாத்தியக்கூறுகள் இருந்தாலும் பெரும்பாலான மருத்துவர்கள் அறுவை சிகிச்சை முறையை கையாளுகின்றனர். 8 மணி நேரத்தில் 10 பேருக்கு பிரசவம் பார்க்க வேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ளதால் வேலையை எளிமையாக்க சிசரியன் முறையை கையாளுகின்றனர். அதனால்,  கர்நாடக மாநிலத்தில் சிசரியன் மூலம் குழந்தை பெறுபவர்களின் எண்ணிக்கை 25% உயர்ந்துள்ளது என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

சாத்தியமற்ற சூழ்நிலையில் 10 முதல் 15 சதவீதம் பேருக்கு மட்டுமே சிசரியன் முறையை கையாளலாம் என்று உலக சுகாதார நிறுவனம் ஒரு வரையறை வைத்துள்ளது. ஆனால் கர்நாடகாவில் 25 சதவீத மருத்துவமனைகள் சிசரியன் மூலம் பிரசவம் பார்க்கின்றனர். மாவட்ட வாரியாக பார்த்தால் சிசரியன் மூலம் குழந்தை பெறுவதில் உடுப்பி மாவட்ட  மருத்துவமனைகள் முதல் இடத்தில் உள்ளன. உடுப்பி - 46.6%, ஷிவமொக்கா- 37.6 % ,  துமகூரு - 37.5% , குடகு 30.2 %, பெங்களூரு 27.7%, மண்டியா-26.3 % என்ற விகிதத்தில் உள்ளது.

சுகாதார நிறுவனங்கள் கூறும் காரணங்கள் :-

சிசரியன் குழந்தை பிறப்பு உயர்ந்து வருவதற்கு சுகாதார நிறுவனங்கள் சில காரணங்களை முன் வைக்கின்றன. சில மருத்துவர்கள் தனியாக கிளினிக் தொடங்கி இருப்பதால் அவர்கள் அப்பணியில் மும்முரமாக உள்ளனர். காப்பீட்டுத் தொகை சுகப்பிரசவத்தைக் காட்டிலும் சிசரியனுக்கு அதிகம் என்பது மற்றொரு காரணம் என்கின்றனர். பிற மாநிலங்களைப் போல கர்நாடகாவில் 24 மணி நேர மருத்துவ சேவை இல்லை.

வேலையாட்கள், தொழில்நுட்ப வசதிகள் அரசு மருத்துவமனைகளில் இல்லை, சுகப்பிரசவத்தால் நேரம் விரயமாவதால் மருத்துவர்கள் சிசரியனை தேர்ந்தெடுக்கின்றனர்  என்ற புகாரும் எழுகிறது. சாத்தியமற்ற சூழ்நிலையில் 10 முதல் 15 சதவீதம் பேருக்கு மட்டுமே சிசரியன் முறையை கையாளலாம் என்று உலக சுகாதார நிறுவனம் ஒரு வரையறை வைத்துள்ளது. ஆனால் கர்நாடகாவில் 25 சதவீத மருத்துவமனைகள் சிசரியன் மூலம் பிரசவம் பார்க்கின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : state hospitals ,women , Surgery, childbirth, Karnataka government, hospitals
× RELATED மதுரையில் மீனாட்சியம்மன்...