×

டெல்லி மக்களவை தொகுதிகளுக்கான கூட்டணி பேச்சுவார்த்தை முறிய கெஜ்ரிவால் யு-டர்ன் அடித்ததே காரணம்: பொதுகூட்டத்தில் ராகுல் காந்தி குற்றச்சாட்டு

புதுடெல்லி: ஆம் ஆத்மியுடன் டெல்லியில் கூட்டணி அமைத்து போட்டியிட காங்கிரஸ் கட்சி ஒப்புக்கொண்டபோதும், கூட்டணி முறிய கெஜ்ரிவால் யு-டர்ன் எடுத்ததே காரணம் என ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார். டெல்லியில் உள்ள 7 மக்களவை தொகுதிகளுக்கும் வருகிற 12ம் தேதி வாக்குபதிவு நடைபெற உள்ள. இதையொட்டி பிரதான அரசியல் கட்சிகளின் பிரசாரம் உச்சகட்ட பரபரப்பில் உள்ளது. ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணி பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததை அடுத்து காங்கிரஸ் கட்சி 7 தொகுதிகளிலும் தனித்து களம் காண்கிறது. இந்நிலையில், காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் தேசிய தலைவர் ராகுல் காந்தி நேற்று முன்தினம் சாந்தினி சவுக் பகுதியில் பிரசாரம் மேற்கொண்டார்.

அப்போது ராகுல் காந்தி கூறியதாவது:

காங்கிரஸ் கட்சியால் மட்டுமே மோடி, பாஜ மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்புகளை தடுத்து நிறுத்த முடியும். கடந்த 2014ம் ஆண்டு தேர்தலில் கெஜ்ரிவால் காஙகிரஸ் கட்சி பற்றி பொய்களை பரப்பி பாஜ கட்சியின் வெற்றிக்கான கதவுகளை திறந்து வைத்தார். பாஜ கட்சி தனித்து காங்கிரஸ் பற்றி பொய்களை பரப்பவில்லை. நான் கெஜ்ரிவால்ஜியிடம் வலியுறுத்தியது என்னவெனில், டெல்லியில் உள்ள 7 தொகுதிகளையும் வெற்றி பெற்றாக வேண்டும் என தெளிவாக கூறினேன். ஆம் ஆத்மி 4 தொகுதிகளில் போட்டியிடவும், காங்கிரஸ் 3 தொகுதிகளில் போட்டியிடவும் நான் ஒப்புக்கொண்டேன். முதலில் கெஜ்ரிவால் ஒப்புக்கொண்டார்.

அதனை நாங்களும் ஏற்றுக்கொண்டோம். ஆனால், அதன்பின்னர் யுடர்ன் எடுத்து பஞ்சாப் மற்றும் அரியானா பற்றிய பேச்சை கெஜ்ரிவால் துவக்கினார். காங்கிரஸ் கட்சி மட்டுமே கடந்த 5 ஆண்டுகளில் நாடு முழுவதும் பாஜவை எதிர்த்து வந்துள்ளது. இதனை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். குஜராத், மத்திய பிரதேசம், சட்டிஸ்கார், ராஜஸ்தான், பஞ்சாப், கர்நாடகா என நரேந்திர மோடி சென்ற இடங்களில் எல்லாம் அவரை காங்கிரஸ் தோற்கடித்துள்ளது. நரேந்திரமோடி, பாஜ, ஆர்எஸ்எஸ் ஆகியவை ஒரு அங்குலம் கூட நகர்வதற்கு நான் விடமாட்டேன். நாடாளுமன்றத்திலும் பாஜவை எதிர்த்து காங்கிரஸ் எம்பிக்கள் போராடினர். இவ்வாறு ராகுல் பேசினார்.

கூட்டணி பேச்சுவார்த்தை முறிந்த விவகாரத்தில் ஆம் ஆத்மியும், காங்கிரஸ் கட்சியும் மாறி மாறி ஒருவர் மீது மற்றொருவர் புகார் கூறி வருகின்றனர். டெல்லியை பொறுத்தவரை ஒரே வாக்கு வங்கிக்கு ஆம் ஆத்மியும், காங்கிரசும் மல்லுகட்டி நிற்கின்றன. கடந்த 2014 தேர்தலின் போது, ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் அன்னா அசாரே, கெஜ்ரிவால் கூட்டணி தகர்த்து ஆட்சியிலிருந்து கீழறங்க காரணமாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Speech ,Rahul Gandhi ,Kejriwal Yu-Turn-Up Attacks Alliance Speaks Of Lok Sabha , Delhi Lokayukta constituency, coalition, Kejriwal U-turn, Rahul Gandhi, accusation
× RELATED சாதிவாரி கணக்கெடுப்பை எந்த...