×

கேரளா வளர்ச்சிக்கு பாஜ முட்டுக்கட்டை: பினராய் விஜயன் பகீர் குற்றச்சாட்டு

திருவனந்தபுரம்: கேரளாவின் வளர்ச்சிக்கு பாஜ முட்டுக்கட்டை போட்டுள்ளது என்று மாநில முதல்வர் பினராய் விஜயன் கூறினார்.கேரள முதல்வர் பினராய் விஜயன் நேற்று திருவனந்தபுரத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது: கேரளாவில் தேசிய நெடுஞ்சாலைக்கான விரிவாக்க பணிகள் கடந்த 2 ஆண்டுகளாக முடங்கி கிடக்கின்றன. இதற்கு பாஜ தான் காரணம் என  தற்போது தெரியவந்துள்ளது. தேசிய நெடுஞ்சாலைக்கான நிலம் கையகப்படுத்துவதை நிறுத்தி வைக்க வேண்டும் எனக் கூறி மத்திய சாலை  போக்குவரத்துத் துறை அமைச்சருக்கு கேரள பாஜ தலைவர் தரன்பிள்ளை கடிதம் எழுதி உள்ளார். இது கேரள மக்களை அதிர்ச்சி அடைய  வைத்துள்ளது.

கேரளாவின் வளர்ச்சிக்கு பாஜ முட்டுக்கட்டை போட்டுள்ளது. கேரள மக்கள் போக்குவரத்து நெருக்கடியில் சிக்கி தவிக்கட்டும் என்ற சாடிஸ்ட்  மனப்பான்மையுடன் பாஜ தலைவர் தரன்பிள்ளை செயல்பட்டுள்ளார். கேரள மக்கள் இதையெல்லாம் பார்த்து கொண்டுதான் இருக்கிறார்கள்.  இப்படியொரு கடிதத்தை மத்திய அரசுக்கு அனுப்புவதற்கு முன் மாநில அரசிடம் தெரிவித்திருக்க வேண்டும். அல்லது பொதுமக்களிடமாவது  தெரிவித்திருக்க வேண்டும். அப்படி செய்யாமல் அவர் மிகவும் ரகசியமாக கடிதத்தை மத்திய அரசுக்கு அனுப்பி உள்ளார்.கேரளா கடுமையான வெள்ளத்தால் பாதிக்கப்பட்டபோது பல்வேறு நாடுகளில் இருந்து கிடைக்க வேண்டிய நிதியுதவிக்கும் மத்திய அரசு  முட்டுக்கட்டை போட்டது அனைவருக்கும் தெரியும். கேரளா மட்டுமல்லாமல் பாஜ ஆட்சியில் இல்லாத மாநிலங்களை மத்திய அரசு  புறக்கணிக்கிறது. வளர்ச்சி திட்டங்களை தொடர்ந்து முடக்குவதால் பாஜ நாட்டுக்கு பாரமாகி விட்டது. இவ்வாறு அவர் கூறினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : BJP ,Kerala ,Pinarayi Vijayan Bhagir , Kerala, Muttukattai, Pinarayi Vijayan, Bhagir's charge
× RELATED பா.ஜ. வேல் யாத்திரைக்கு போலீஸ் தடை; மறியல்