ஐசிஎஸ்இ 10, 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு: 2 மாணவர்கள் 100% மதிப்பெண்

புதுடெல்லி: ஐசிஎஸ்இ தேர்வில் முதல் முறையாக 12ம் வகுப்பு மாணவர்கள் இரண்டு பேர் நூறு சதவீத மதிப்பெண்கள் எடுத்து வெற்றி  பெற்றுள்ளனர்.  ஐசிஎஸ்இ 10, 12ம் வகுப்பு தேர்வு முடிவுகளை அக்கவுன்சிலின் தலைமை நிர்வாகியும் செயலாளருமான ஜெரி ஆரத்தோன் நேற்று வெளியிட்டார்.  இதில் 10ம் வகுப்பில் மாணவிகள் 99.05 சதவீதமும் மாணவர்கள் 98.12 சதவீதமும் வெற்றி பெற்றுள்ளனர். அதேபோல, 12ம் வகுப்பில் மாணவிகள்  97.84 சதவீதமும் மாணவர்கள் 95.40 சதவீதமும் தேர்ச்சி அடைந்துள்ளனர். 10, 12 வகுப்பு தேர்வு முடிவில் வழக்கம்போல் மாணவர்களை விட  மாணவிகள் அதிகளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

பத்தாம் வகுப்பில் மும்பையை சேர்ந்த ஜூகி ரூபேஷ் கஜாரியா, பஞ்சாப் மாநிலம் முத்சார் பகுதியை சேர்ந்த மான்கர் பன்சால் ஆகியோர் 99.60%  மதிப்பெண்களுடன் முதலிடத்தில் வெற்றி பெற்றுள்ளனர். 99.40% மதிப்பெண் பெற்று 10 மாணவர்கள் 2ம் இடத்தையும், 99.20 %மதிப்பெண்கள் எடுத்து  24 மாணவர்கள் 3ம் இடத்தையும் பிடித்துள்ளனர்.

அதேபோல, 12ம் வகுப்பில் கொல்கத்தாவை சேர்ந்த தேவாங் குமார் அகர்வாலும் பெங்களூருவை சேர்ந்த விபா சுவாமிநாதனும் 100 சதவீத  மதிப்பெண்ணுடன் முதல் இடத்தை பகிர்ந்துள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: