×

கார்த்தி சிதம்பரம் வெளிநாடு செல்ல அனுமதி

புதுடெல்லி: ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரம், அவரது மகன் கார்த்தி சிதம்பரம் ஆகியோர் மீது சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை  தனித்தனியே வழக்குகள் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன. இதற்கிடையே, சொந்த அலுவல் காரணமாக இம்மாதம் வெளிநாடுகளுக்கு  செல்ல அனுமதி கேட்டு உச்ச நீதிமன்றத்தில் கார்த்தி சிதம்பரம் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த  மனு உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி  ரஞ்சன் கோகாய் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. நீதிபதிகள் உத்தரவில், “கார்த்தி சிதம்பரத்தின் கோரிக்கையை நீதிமன்றம் ஏற்றுக்கொள்கிறது. இருப்பினும் ₹10 கோடி வைப்பு நிதியாக  செலுத்திவிட்டு அவர் வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொள்ளலாம். மேலும், ஏற்கனவே பிறப்பித்த நிபந்தனைகளையும் அவர் பின்பற்ற வேண்டும்’’  என கூறினர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Karthi Chidambaram , Karthi Chidambaram, abroad, allowed
× RELATED ராமர் கோயிலின் ₹8 ஆயிரம் கோடிக்கு வரி...