×

‘ஹலோ மைக் டெஸ்டிங் 1, 2 3’ல் பிரதமர் மோடி ‘நம்பர் ஒன்’

நாடு முழுவதும் உள்ள 543 மக்களவை தொகுதிகளுக்கான தேர்தலை 7 கட்டங்களாக தேர்தல் ஆணையம் நடத்துகிறது. இதுவரை 5 கட்ட தேர்தல்  முடிவடைந்துள்ளது. மே 12ம் தேதியன்று 6வது கட்ட தேர்தலும், 19ம் தேதியன்று இறுதிக்கட்ட தேர்தலும் நடக்க  உள்ளது. கடந்த மார்ச் 11ம் தேதி தேர்தல் அறிவிப்பு வெளியானதிலிருந்து கட்சி தலைவர்கள் நாடு முழுவதும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.  இதுவரை நடந்த பிரசாரங்களில் அதிக கூட்டங்களில் பங்கேற்ற  தலைவர்கள் பட்டியலில் பிரதமர் மோடி முதலிடம் பிடித்துள்ளார்.
மோடி 110 பிரசார கூட்டங்களில் பங்கேற்றுள்ளார். மோடிக்கு அடுத்தபடியாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி 103 பிரசாரக் கூட்டங்களில்  பங்கேற்றுள்ளார்.

 இதில் உத்தரப் பிரதேச மாநிலத்தில் தான் இருவரும் அதிக கூட்டங்களில் பங்கேற்றுள்ளனர். உபி.யில்  பிரதமர் மோடி 19 கூட்டங்களிலும்,  காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி 18 கூட்டங்களிலும் பங்கேற்றுள்ளனர். பா.ஜ.,வை பொறுத்தவரை இந்தி பேசும் மாநிலங்களில் ஏற்படும் சரிவை  சமாளிக்க, மேற்குவங்கம், ஒரிசா போன்ற  மாநிலங்களில் அதிக கவனம் செலுத்தி வருகிறது.  மோடி மேற்கு வங்கத்தில் 11 கூட்டங்களிலும், ஒடிசாவில் 8 கூட்டங்களிலும் பங்கேற்றுள்ளார். காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரை உத்தரப்  பிரதேசத்திற்கு அடுத்தபடியாக கேரளா, ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் மற்றும் கர்நாடகாவில் அதிக கூட்டங்களை நடத்தியுள்ளது.

கூட்டங்களை அதிகப்படுத்தும் பா.ஜ.,

மே 12 ம் தேதியில் 59 தொகுதிகளுக்கான தேர்தலும், மே 19 ம் தேதியில் 59  தொகுதிகளுக்கான 7வது கட்ட தேர்தலும் நடக்கிறது.  உத்தரப்  பிரதேசம் (27), மேற்கு வங்கம் (17), மத்தியப் பிரதேசம் (16), பீகார்  (16), பஞ்சாப் (13) அரியானா (10), ஜார்கண்ட் (7), டெல்லி (7) மற்றும்  இமாச்சலப் பிரதேசம் (4)தொகுதிகளில் தேர்தல் நடக்கிறது. பிரதமர் மோடி,  பா.ஜ., தலைவர் அமித்ஷா பங்கேற்கும் கூட்டங்களுக்கான பட்டியல் ஏற்கனவே  அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் பிரசாரக்  கூட்டங்களின் எண்ணிக்கையை  பாஜ அதிகரித்துள்ளதாக தெரிகிறது. பிரதமர் மோடி உத்தரப் பிரதேசம் மேற்கு வங்கம், அரியானா மாநிலங்களில்  கூடுதலாக 6 பிரசார கூட்டங்களிலும், பாஜ தலைவர்  அமித்ஷா 11 கூட்டங்களிலும் பேச உள்ளதாக கூறப்படுகிறது. நடந்து முடிந்த 5 கட்ட  தேர்தல்களில் பாஜ.வுக்கு ஏற்பட்டுள்ள  பின்னடைவை சரி செய்ய பிரசாரக் கூட்டங்களின் எண்ணிக்கையை அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Hello Mike Testing ,Number One , 'Hello Mike Testing, Prime Minister Modi,' Number One '
× RELATED பொய் போட்டி மோடி நம்பர் ஒன் அண்ணாமலைக்கு 2வது இடம்தான்: சொல்கிறார் கருணாஸ்